விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

விற்பனை சரிவால் இந்தியாவில் ஒரு கார் தொழிற்சாலையை மூடுவதற்கு ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டாவுக்கு இந்தியாவில் இரண்டு கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளது. இதுதான் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் துவங்கிய முதல் கார் ஆலை. இரண்டாவது கார் ஆலை ராஜஸ்தானில் உள்ள தபுகெரா என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்தான் திறக்கப்பட்டது.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

இதில், கிரேட்டர் நொய்டா ஆலையில் ஆண்டுக்கு 1.2 லட்சம் கார்களையும், தபுகெரா ஆலையில் ஆண்டுக்கு 1.6 லட்சம் கார்களையும் உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்திய வர்த்தகத்தில் தடுமாறி வருகிறது ஹோண்டா கார் நிறுவனம்.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

மேலும், நடப்பு ஆண்டில் கார் மார்க்கெட்டில் பெரும் சரிவு ஏற்பட்டதால், ஹோண்டாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹோண்டா விற்பனை 51.28 சதவீதம் குறைந்தது. அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 17,020 கார்களை விற்பனை செய்திருந்த அந்நிறுவனம், கடந்த ஆகஸ்ட்டில் 8,291 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

விற்பனை தொடர்ந்து சரிந்து வரும் இந்த சூழலால், ஹோண்டா நிறுவனத்தின் வர்த்தகம் மீணடும் எப்போது எழுச்சி பெறும் என்பது கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், இந்திய வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

இதன்படி, கிரெட்டர் நொய்டாவில் உள்ள கார் தனது கார் தொழிற்சாலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, ஆண்டுக்கு 1.2 லட்சம் உற்பத்தி திறன் கொம்ட இந்த ஆலையில், தற்போது மாதத்திற்கு 2,500 கார்கள்தான் உற்பத்தி செய்யப்படுகிறதாம்.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

அதுமட்டுமல்லாமல், இந்த கார் ஆலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளை தாண்டி விட்டதால், சிறப்பு சலுகைகளையும், வரித் தள்ளுபடியையும் அரசிடம் இருந்து இனி இந்த ஆலைக்கு பெற முடியாது. அத்துடன், அந்த ஆலை அமைந்துள்ள பகுதியானது மக்களின் பெரிய அளவிலான குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டது.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

இதனால், இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்துவிட்டதால், கார் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றன. அதேபோன்று, உற்பத்தி செய்யப்பட்ட கார்களை எடுத்துச் செல்வதிலும் பெரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

இதையெல்லாம் மனதில் வைத்து இந்திய வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் வகையில் கிரேட்டர் நொய்டா ஆலையை மூடுவதற்கு ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆலைக்கு உற்பத்தியை முற்றிலுமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளதாம்.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

எதிர்காலத்தில் தேவைப்பட்டால், இந்த ஆலையை விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது. அத்துடன், குஜராத்தில் மூன்றாவது ஆலை அமைக்கும் நோக்கத்துடன் வாங்கப்பட்ட நிலத்தையும் விற்பனை செய்வதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த திட்டத்தை ஹோண்டா கையில் எடுத்துள்ளதாகவும், தற்போது இறுதி முடிவுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனினும், சிறிய அளவிலான உற்பத்திப் பணிகளையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் கிரேட்டர் நொய்டா ஆலையில் வைத்துக்கொள்வது பற்றியும் ஹோண்டா பரிசீலித்து வருகிறதாம்.

விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு?

இந்தியாவில் எதிர்பார்த்த அளவு வர்த்தகம் இல்லாததையடுத்து, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியேறியது. ஃபோர்டு கார் நிறுவனமும் இந்திய வர்த்தகத்தை மஹிந்திரா வசம் ஒப்படைத்துவிட்டு நேரடி வர்த்தகத்திலிருந்து வெளியேறுகிறது. அடுத்து ஹோண்டா நிறுவனமும் தனது ஒரு கார் ஆலையை மூட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுபவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது.

Source: ET Auto

Most Read Articles
English summary
According to media report, Honda is planning to shut down Greater Noida car plant due to industry slow down.
Story first published: Friday, October 25, 2019, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X