ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லி டீசல் மாடலில் புதிய வேரியண்ட்டுகள்!

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் விலை குறைவான இரண்டு புதிய வேரியண்ட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லி டீசல் மாடலில் புதிய வேரியண்ட்டுகள்!

கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர் போன்ற புதிய மாடல்களின் வரவு ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நெருக்கடியை தந்துள்ளது. இதனையடுத்து, க்ரெட்டா எஸ்யூவியின் விற்பனையை தொடர்ந்து ஸ்திரமாக வைக்கும் முயற்சிகளில் ஹூண்டாய் மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லி டீசல் மாடலில் புதிய வேரியண்ட்டுகள்!

அதன்படி, க்ரெட்டா எஸ்யூவியின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் விலை குறைவான E Plus மற்றும் EX ஆகிய இரண்டு புதிய பேஸ் வேரியண்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தற்போது க்ரெட்டா டீசல் மாடலானது 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் ஆகிய இரண்டு எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லி டீசல் மாடலில் புதிய வேரியண்ட்டுகள்!

க்ரெட்டா டீசல் மாடல்கள் ரூ.9.99 லட்சம் முதல் ரூ.15.67 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த புதிய வேரியண்ட்டுகளின் விலை விபரத்தை ஹூண்டாய் மிக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லி டீசல் மாடலில் புதிய வேரியண்ட்டுகள்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் இந்த புதிய பேஸ் வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இஎக்ஸ் வேரியண்ட்டில் கூடுதலாக ரியர் வியூ கேமரா கொடுக்கப்படுகிறது.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லி டீசல் மாடலில் புதிய வேரியண்ட்டுகள்!

இ ப்ளஸ் வேரியண்ட்டில் ரிமோட் லாக்கிங் சிஸ்டம், மேனுவல் ஏசி சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் சைடு மிரர்கள், பின் இருக்கை பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள், பவர் விண்டோ வசதி, அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகியவை வழங்கப்படுகின்றன. இஎக்ஸ் வேரியண்ட்ட்டில் கூடுதலாக எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள் மற்றும் 5.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

MOST READ: போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லி டீசல் மாடலில் புதிய வேரியண்ட்டுகள்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் இருக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 எச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழஙகும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இ ப்ளஸ் மற்றும் இஎக்ஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

MOST READ: சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டி வரும் இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லி டீசல் மாடலில் புதிய வேரியண்ட்டுகள்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், தற்போது க்ரெட்டா வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் புதிய வேரியண்ட்டுகளை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

Most Read Articles

English summary
Hyundai is all set introduce new base variants of Creta 1.6 diesel engine option in India.
Story first published: Wednesday, October 16, 2019, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X