ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

மிக ஆச்சரியமான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் கார், இந்தியாவில் இதுவரை வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கடந்த மே மாதம் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் வெனியூதான்.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

அது மட்டுமா? ஹூண்டாய் வெனியூதான் இந்தியாவின் முதல் 'கனெக்டட் கார்' என்பதும் குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிட்டு வருகிறது. ஆனால் இதில் இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது வெனியூதான்.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

ஹூண்டாய் வெனியூ காரில் அதிநவீன மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லை. எக்கச்சக்கமான வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் வாரி வழங்கியுள்ளது. வென்டிலேட்டட் இருக்கைகள், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட்கள், ப்ளூ லிங்க் கனெக்டிவிட்டி டெக்னாலஜி என ஹூண்டாய் வெனியூ காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

இதுதவிர ட்யூயல் ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளும் ஹூண்டாய் வெனியூ காரில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் ஹூண்டாய் வெனியூ காரின் டாப் எண்ட் வேரியண்ட்களில், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் வைப்பர்கள் மற்றும் ஹெட்லேம்ப்ஸ், ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஹூண்டாய் வெனியூ காரில் மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில், 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவர், 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் (DCT - Dual Clutch Transmission) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

அதே சமயம் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் ஹூண்டாய் வெனியூ காரில் உள்ளது.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

ஹூண்டாய் வெர்னா மற்றும் கிரெட்டா உள்ளிட்ட கார்களிலும் இதே இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் வெனியூ காரில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 எச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

அதிநவீன வசதிகள் மற்றும் பெட்ரோல், டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளிட்ட காரணங்களால் ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். இந்த சூழலில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் 60 நாட்களில், வெனியூ காருக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

இந்தியாவில் இதற்கு முன்பாக வேறு எந்த காருக்கும் இவ்வளவு விரைவாக, அதாவது இவ்வளவு குறுகிய நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புக்கிங் குவிந்ததில்லை என கூறப்படுகிறது. வெனியூ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் அமோக வரவேற்பு காரணமாக ஹூண்டாய் நிறுவனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளது.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

இதுதவிர 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெனியூ கார்களை டெலிவரி செய்துள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், 55 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் ப்ளூ லிங்க் கனெக்டிவிட்டி டெக்னாலஜியுடன் கூடிய வேரியண்ட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மொத்தமாக வந்துள்ள முன்பதிவுகளில், 35 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வேரியண்டிற்கே முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

ஆச்சரியமான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்... வேறு எந்த காரும் படைக்காத இமாலய சாதனை!!

ஹூண்டாய் வெனியூ காரின் பிரம்மாண்ட வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணம் அதன் விலைதான். ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 6.50 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) மட்டுமே! ஹூண்டாய் நிறுவனம் இந்த விலையை அறிவித்தபோது இந்திய மார்க்கெட் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. இது இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற மிக சவாலான விலை நிர்ணயம் என்பதால், ஹூண்டாய் வெனியூ வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்த்து விட்டது.

Most Read Articles
English summary
Hyundai Venue Demand Off The Charts — 50,000 Bookings & 18,000 Deliveries Since Launch. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X