ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கான காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு காருக்கு எகிடுதகிடான வரவேற்பு இருந்து வருகிறது. கார் மார்க்கெட் சுணக்கமான நிலையில் இருந்தபோதிலும், இந்த எஸ்யூவிக்கு 20,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை நீள்வதாக டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. கார் மார்க்கெட் சுணக்கமான நிலையிலும், ஹூண்டாய் வெனியூ காருக்கான இந்த வரவேற்பு ஹூண்டாய் நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளிப்பதாகவே அமைந்துள்ளது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கான வரவேற்பு எகிடுதகிடாக இருப்பதற்கு ஏராளமான சிறப்புகளை இந்த கார் பெற்றிருக்கிறது. இளைய சமுதாயத்தை கவரும் வகையிலான டிசைன், சிறந்த எஞ்சின் தேர்வுகள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சரியான விலை போன்றவை இந்த காருக்கான வரவேற்பு சிறப்பாக அமைந்துள்ளது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

புதிய ஹூண்டாய் வெனியூ கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் என மூன்று விதமான தேர்வுகளில் கிடைக்கிறது. விலை குறைவான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 பிஎஸ் பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

இந்த காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும்,, 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

டீசல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக தெரிகிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

மேலும், இந்த காரில் வழங்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இன்டர்நெட் வசதியுடன் வந்துள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள புளூலிங்க் என்ற பிரத்யேக மொபைல்போன் அப்ளிகேஷனை பயன்படுத்தி, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும். இந்த புதுமையான தொழில்நுட்ப வசதி வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

இந்த எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் அர்கமிஸ் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்டரோல் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல்போன் சார்ஜர், சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு வெயிட்டிங் பீரியட் நீள்கிறது!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி ரூ.6.50 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளதும் இந்த காருக்கான வரவேற்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த காரின் எஸ் மற்றும் எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டுகளுக்கு அதிக காத்திருப்பு காலம் நீள்கிறது.

Most Read Articles
English summary
The waiting period for the Hyundai Venue now stands between 6-8 weeks according to information from multiple dealerships. This is just enough information to call the Hyundai Venue a success in the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X