வாங்கிய சில நாட்களிலேயே விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர் — காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் காரை வாங்கிய சில நாட்களிலேயே, அதன் உரிமையாளர் செகண்ட் ஹேண்டாக விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கான காரணம் மிகவும் அதிர்ச்சியளிக்கும் உள்ளது.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி நிறுவனம், அதன் புத்தம் புதிய ஹெக்டர் எஸ்யூவி மாடல் காரை அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகமான வெறும் 22 நாட்களில் 21 ஆயிரம் புக்கிங்குகளை அள்ளிக் குவித்தது.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

ஆனால், அந்த காரின் உற்பத்தி மையமோ மாதம் 2 ஆயிரம் யூனிட்டுகளை மட்டுமே தயாரிக்கும் அளவிலான கொள்ளளவை கொண்டதாக இருக்கின்றது. ஆகையால், தற்போது புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம், காத்திருப்பு காலமாக 10 மாதங்கள் வரை காலக்கெடு வழங்கி வருகின்றது.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இந்த நீண்ட நாள் காத்திருப்பு காரணமாகவும், அது மேலும் உயர்ந்துக் கொண்டே செல்வதைத் தடுக்கும் விதமாகவும், எம்ஜி நிறுவனம், ஹெக்டர் காருக்கான புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், 2019 ஹெக்டர் காருக்கான புக்கிங் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகின்றது.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அதேசமயம், முன்னதாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு, காரை டெலிவரி செய்யும் பணியிலும் அந்நிறுவனம் முழுவீச்சாக செயல்பட்டு வருகின்றது.

அந்தவகையில், கேரள மாநிலத்தில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் ஷோரூம் ஒன்று, ஒரே நாளில் 30 ஹெக்டர் காரை டெலிவரி செய்து சாதனைப் படைத்தது. அதேபோன்று, இந்தியாவில் வேறு சில டீலர்களும் டசன் கணக்கில் கார்களை டெலிவரி செய்து சாதனைப் படைத்தனர்.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இவ்வாறு, இந்தியாவில் இந்த காருக்கான வரவேற்பு இமலாய அளவில் கிடைத்து வருகின்றது. அதேசமயம், இதன் நீண்ட நாள் காத்திருப்பு, அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விரைவில் புக்கிங்கை தொடர பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இந்நிலையில், நீண்ட நாள் காத்திருப்பையும், புக்கிங் நிறுத்தத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, முன்னதாக ஹெக்டர் காரை வாங்கிய வாடிக்கையாளர்கள் சிலர், அந்த காரை கூடுதல் விலைக்கு விற்பனைச் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அந்தவகையில், அண்மையில் ஹெக்டர் காரை டெலிவரி பெற்ற கேரளாவைச் சார்ந்த வாடிக்கையாளர் ஒருவர், ஹெக்டர் காரை ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனைக்கு அறிவித்துள்ளார்.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அது, வெள்ளை நிறத்திலான டீசல் டாப் எண்ட் ஷார்ப் வேரியண்ட் என கூறப்படுகின்றது. இது, கேரளாவில் ரூ. 20 லட்சம் என்ற ஆன் ரோடு விலையில் விற்பனையாகி வருகின்றது. ஆனால், இந்த காரை அவர் ரூ. 23 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளார். இதில், அவருக்கு மூன்று லட்சம் லாபமாகும்.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

மேலும், இந்த கார் இதுவரை 100 கிமீ வரை மட்டுமே பயணித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், அந்த கார்குறித்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், தற்காலிகமான நம்பர் பிளேட் இடம்பெற்றுள்ளது. ஆகையால், கார் தற்காலிக பதிவெண்ணை மட்டுமே தற்போது பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த விளம்பரத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

எம்ஜி நிறுவனத்தின் இந்த ஹெக்டர் கார் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என அழைக்கப்படுகின்றது. இந்த அம்சமானது, இ-சிம் மூலம் இயங்கக்கூடியது. இது, மொபைல் போன்களைக் காட்டிலும் அிகவேகமான செயல்பாட்டைக் கொண்டது என கூறப்படுகின்றது. அவ்வாறு, அது 5ஜி தரத்திற்கு ஈடானது என கூறப்படுகின்றது.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

மேலும், இந்த சிறப்பம்சத்தைக் கையாளும் வகையில், டேப் அளவிலான 10.4 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஹெக்டர் எஸ்யூவி ரக காரில் பொருத்தப்பட்டுள்ளது. இது, காரை நேரடி இணையதள சேவையுடன் இணைத்து, பல்வேறு சிறப்பு வசதிகளைப் பெற நமக்கு உதவும்.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதில், பெட்ரோல் எஞ்ஜின் 1.5 லிட்டர் அளவிலும், டீசல் எஞ்ஜின் 2.0 லிட்டர் மல்டிஜெட் யூனிட்டிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 143 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. அதேபோன்று டீசல் எஞ்ஜின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இதைத்தொடர்ந்து, எம்ஜி நிறுவனம், ஹெக்டர் காரில் 48 வோல்ட் மைல்ட் ஹைபிரிட் சிஸ்டத்தை, அதன் டாப் மூன்று வேரியண்டுகளில் வழங்குகின்றது. ஆகையால், இந்த செக்மெண்ட்டில், இச்சிறம்பத்தை பெரும் முதல் காராக இது மாறியிருக்கின்றது.

அதேசமயம், இந்த ஹைபிரிட் சிஸ்டம் அதன் பெட்ரோல் வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்றது.

100கிமீ பயணம்... வாங்கிய சில நாட்களிலேயே செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கு வந்த எம்ஜி ஹெக்டர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இந்த காரின் பெட்ரெல் வேரியண்டில் 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கின்றது. மற்ற மாடல்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது.

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷனையும் இந்தியாவில் விரைவில் மார்க்கெட்டில் களமிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: OLX

Most Read Articles
English summary
India’s First Used MG Hector Car Comes On Sale In OLX. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X