ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது!

ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் கார் பந்தய போட்டிகள் விரைவில் இந்தியாவில் துவங்கப்பட இருக்கின்றன. இதன் முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது!

இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயரை அடிப்படையாகக் கொண்ட அணிகளுடன் துவங்கப்பட்ட ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதே பாணியை பின்பற்றி உள்ளூர் அணிகள் பங்கேறும் கால் பந்து உள்ளிட்ட விளையாட்டுகளும் நடக்கின்றன. மேலும், வெளிநாடுகளிலும் ஐபிஎல் போட்டியை போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது!

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் ஃபார்முலாவை பின்பற்றி கார் பந்தயமும் இந்தியாவில் துவங்கப்பட இருக்கிறது. இந்தியாவின் பிரபல கார் பந்தய வீரர்களான அர்மான் இப்ராஹீம் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகிய இருவரும் இணைந்து இந்த கார் பந்தயத்திற்கான ஃபார்முலாவை உருவாக்கி இருக்கின்றனர்.

ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது!

எக்ஸ்-1 ரேஸிங் லீக் என்ற பெயரில் இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஐபிஎல் போன்றே, இந்த அணிகளும் நாட்டின் முக்கிய நகரங்களின் பெயரில் செயல்பட இருப்பதுடன், ஸ்பான்சருடன் நடக்க இருக்கிறது.

ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது!

ஐபிஎல் போட்டிகளை எப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறதோ, அதேபோன்று, இந்திய மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் அமைப்பு (FMSCI) இந்த போட்டிகளை நடத்த இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகளின் சார்பில் 32 வீரர்கள் களம் காண உள்ளனர்.

ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது!

இந்த போட்டிகள் 12 வார இறுதி நாட்களில் மட்டும் நடக்கும். மொத்தம் 24 நாட்கள் போட்டிகள் நடக்க இருக்கின்றன. 40 ரேஸ்கள் கொண்டதாக இந்த போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது!

ஒவ்வொரு பந்தயமும் 45 நிமிடங்கள் நடைபெறும். அத்துடன், நாள் ஒன்றுக்கு 3 ரேஸ்கள் வீதம் நடத்தப்பட இருக்கின்றன. டெல்லி அருகே நொய்டாவில் அமைந்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் மற்றும் சென்னை அருகேயுள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. சாதாரண சாலை தடங்களில் நடைபெறும் போட்டிகள் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது.

ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது!

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் அமைப்புடன் தனியார் நிறுவனங்கள் ஸ்பான்சர் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொண்டு உரிமத்தை பெறலாம். இந்த போட்டியில் பங்குபெறுவதற்காக ஃபார்முலா-1, லீ மான்ஸ், ஃபார்முலா-இ, இண்டி-500 மற்றும் நாஸ்கார் போன்ற உலகின் மிக பிரலமான முதல் தர மோட்டார் பந்தயங்களில் பங்கு கொண்டு கலக்கிய முன்னணி கார் பந்தய வீரர்களை இந்த எக்ஸ்-1 ரேஸிங் லீக்கில் அணிகளின் சார்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு பேச்சுவார்த்ததை நடந்து வருகிறது.

ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது!

ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு வீரர் மற்றும் உள்நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இடம்பெறுவர். இதில், வீராங்கனைகளும் இடம்பெற இருப்பதால், பாலின சமத்துவம் பேணப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபரில் முதல் எக்ஸ்-1 ரேஸிங் லீக் பந்தயம் நடக்க இருக்கிறது.

Most Read Articles
English summary
IPL like X1 Motor Racing League to start October 2019.
Story first published: Saturday, May 4, 2019, 13:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X