ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

காம்பஸ் எஸ்யூவி காரின் ஏழு இருக்கை வெர்சனை விரைவில் அறிமுகப்படுத்துவதற்காக தயாரிப்பு வேலைகளில் ஈடுப்பட்டுள்ளதாக ஜீப் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. காம்பஸ் எஸ்யூவியின் இந்த ஏழு இருக்கை வெர்சன் அடுத்த ஆண்டு முதல் விற்பனையாகவுள்ளதாக முந்தைய செய்தியில் கூறியிருந்தோம். ஆனால் இதன் அறிமுகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

அதாவது காம்பஸ் எஸ்யூவி மாடலின் இந்த ஏழு இருக்கை வெர்சன் 2021ஆம் ஆண்டில் தான் அறிமுகமாகவுள்ளதாக இந்த தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையில் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த ஆண்டில் அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுகம் தான் இந்த ஏழு இருக்கை வெர்சனின் தாமத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

2020ல் அறிமுகமாகும் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் ஏகப்பட்ட புதிய அப்டேட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய அப்டேட்களில், காரின் பாடி பேனல்களின் உலோகம் மாற்றம், உட்புற கேபினின் டிசைன் மாற்றம், டேஸ்போர்டு மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களில் புதிய அப்டேட்கள் ஆகியவை இதில் அடங்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

இந்த டிசைன் மாற்றங்கள் மட்டுமல்லாமல் ஜீப் நிறுவனம் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்ஜினின் தரத்தையும் பிஎஸ்6-க்கு இணக்கமாக மேம்படுத்தியுள்ளது. தற்சமயம் விற்பனையாகிவரும் காம்பஸ் மாடல்களில் டாப் வேரியண்ட்டான ட்ரையல்ஹாக்கில் மட்டும் தான் பிஎஸ்6 என்ஜின் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் உடன் மற்ற விலை குறைவான வேரியண்ட்களுக்கும் பிஎஸ்6 என்ஜினை பொருத்தும் வேலையில் ஜீப் நிறுவனம் இறங்கியுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

ஜீப் ட்ரையல்ஹாக்கின் 2.0 லிட்டர் டீசல் பிஎஸ்6 என்ஜின் 173 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸின் விலை குறைவான டீசல் வேரியண்ட்கள் மட்டும் ஆறு நிலை மேனுவல் கியர்பாக்ஸுடன் விற்பனை செய்யப்படுகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

டீசல் என்ஜின் மட்டுமல்லாமல் ஜீப் நிறுவனம் காம்பஸ் எஸ்யூவியில் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வேரியண்ட்டையும் வழங்குகிறது. இந்த என்ஜின் 140 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பெட்ரோல் என்ஜினுடன் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸும் மற்றொரு தேர்வாக ஏழு வேக நிலைகளை வழங்கக்கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கொடுக்கப்படுகின்றன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

2021ல் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகின்ற ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சன், தற்போது உள்ள மாடலை போல் இல்லாமல் விரைவில் அறிமுகமாகவுள்ள காம்பஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் இருக்கும். இதனால் இந்த ஏழு இருக்கை வெர்சன், தற்சமயம் விற்பனையாகி வரும் ஐந்து இருக்கை வெர்சனை விட கூடுதலான தொழிற்நுட்பங்களையும் டிசைன் மாற்றங்களையும் பெற்றிருக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

ஐந்து இருக்கை காம்பஸின் டாப் வேரியண்ட்டான ட்ரையல்ஹாக்கின் விலை ரூ.26 லட்சமாக உள்ளது. இதுதான் தற்சமயம் விற்பனையாகி வரும் காம்பஸ் காரிலேயே அதிக விலையாகும். ஆனால் 2021ல் அறிமுகமாகும் ஏழு இருக்கை வெர்சனின் விலை இதை விடவும் அதிகமாக தான் நிர்ணயிக்கப்படும். அதாவது ஏழு இருக்கை காரின் ஆரம்ப கட்ட வேரியண்ட்டின் விலையே ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் ஐந்து இருக்கை வெர்சன்கள் சிறப்பமான முறையில் விற்பனையாகி வருகின்றன. இதனால் தான் ஜீப் நிறுவனம் காம்பஸின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஏழு இருக்கை வெர்சனை இனி வரும் காலங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏழு இருக்கை அறிமுகத்தால் மஹிந்திரா அல்டுரஸ் ஜி4, ஃபோர்டு எண்டெவர், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்-ஸ்பேஸ் கார்களின் விற்பனை சிறிது பாதிக்கும் என்பது உறுதி.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass 7-Seater SUV Launch Delayed: Company To Focus On Facelift Model Instead
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X