ஜீப் காம்பஸ் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு டிசம்பர் மாத சலுகைகள் அறிவிப்பு...

ஜீப் இந்தியா நிறுவனம் தனது பிரபல மாடலான காம்பஸ் காருக்கு நவம்பர் மாதத்தை தொடர்ந்து இந்த டிசம்பர் மாதத்திற்கும் சில சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன்மூலம் காம்பஸின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் ரூ.55,000ல் இருந்து ரூ.2.10 லட்சம் வரையில் சலுகைகளை பெறுகின்றன.

ஜீப் காம்பஸ் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு டிசம்பர் மாத சலுகைகள் அறிவிப்பு...

விலையுயர்ந்த காம்பஸ் லிமிடேட் (O) மற்றும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் உள்ள பெட்ரோல் வேரியண்ட் கார் அதிகப்பட்சமாக ரூ.2.10 லட்சம் வரையில் சலுகைகளை பெறுகிறது. அதேபோல் காம்பஸ் லாங்கிடியூட் (O) பெட்ரோல் & ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வேரியண்ட் ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகளை பெறுகிறது.

ஜீப் காம்பஸ் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு டிசம்பர் மாத சலுகைகள் அறிவிப்பு...

6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் டீசல் என்ஜினை கொண்ட பேஸ் ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் வேரியண்ட் ரூ.1.05 லட்சம் வரையில் தள்ளுபடிகளை பெறுகிறது. இதே ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை கொண்ட லாங்கிடியூட் (O) வேரியண்ட் ரூ.55,000 வரையில் சலுகைகளை இந்த அறிவிப்பின் மூலம் பெறவுள்ளது.

ஜீப் காம்பஸ் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு டிசம்பர் மாத சலுகைகள் அறிவிப்பு...

காம்பஸின் ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் மாடலில் உள்ள 2.0 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் 173 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டீசல் என்ஜின் மட்டுமில்லாமல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்விலும் இந்த கார் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் என்ஜின் 163 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

ஜீப் காம்பஸ் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு டிசம்பர் மாத சலுகைகள் அறிவிப்பு...

மற்றப்படி காம்பஸ் ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் மாடலின் லிமிடேட் மற்றும் லிமிடேட் (O) க்ரேட்களுக்கு ஜீப் நிறுவனம் டிசம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவிக்கவில்லை. இந்த வருடத்தின் துவக்கத்தில் பிஎஸ்6 தரத்தில் அதிக விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட காம்பஸ் ட்ரையல்ஹாக் மாடலுக்கு ரூ.35,000 மதிப்பில் எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு டிசம்பர் மாத சலுகைகள் அறிவிப்பு...

காம்பஸ் ட்ரையல்ஹாக் மாடலுக்கு கடந்த மாதம் எந்த சலுகையும் அறிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ட்ரையல்ஹாக் 2021ஆம் ஆண்டில் 7 இருக்கை வெர்சனிலும் வெளியாகவுள்ளது. இதுகுறித்த தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

ஜீப் காம்பஸ் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு டிசம்பர் மாத சலுகைகள் அறிவிப்பு...

மற்ற நிறுவனங்களை போல ஜீப் இந்தியா நிறுவனமும் தனது தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்தில் அப்டேட் செய்துவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட காம்பஸ் மாடலின் பெட்ரோல் வேரியண்ட் குறித்த தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

ஜீப் காம்பஸ் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு டிசம்பர் மாத சலுகைகள் அறிவிப்பு...

2017ல் இருந்து விற்பனையாகி வருகின்ற காம்பஸ் மாடல் ஒவ்வொரு மாதமும் விற்பனையில் சரிவை தான் கண்டு வருகிறது. இதனை சரி செய்வதற்காக தான் ஜீப் நிறுவனம் இவ்வாறு சலுகைகளை வழங்கி வருகிறது. இனி வருங்காலத்தில் ஜீப் நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகும் மாடலாவது காம்பஸ் கார்களின் விற்பனையை அதிகரிக்க உதவுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Gets Discount Of Over 2 Lakh
Story first published: Monday, December 16, 2019, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X