ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

அடுத்த ஆண்டில் புதிய மாசு உமிழ்வு விதி அனைத்து வாகனங்களுக்கும் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்கு இந்திய அரசாங்கம் 2020 ஏப்ரல் 1 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளதால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பிஎஸ்6 தரத்தில் வாகனங்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன.

ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

அவற்றில் சில காலக்கெடுவுக்கு முன்பாக அறிமுகமாகவுள்ள நிலையில் பிஎஸ்6 வாகனங்கள் ஒவ்வொன்றாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு சமீபத்தில் ஜீப் இந்தியா நிறுவனம் தனது பிரபல மாடலான காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட்டை பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது.

ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

இதன் வெளியாகியுள்ள புகைப்படங்களின் மூலம் பல தகவல்கள் நமக்கு தெரிய வருகின்றன. அதாவது காரின் பின்புற கண்ணாடியிலும் எரிபொருள் செலுத்தும் இடத்திலும் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் இந்த ஜீப் காம்பஸ் மாடலானது பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட பெட்ரோல் வேரியண்ட் என்பதை உறுதி செய்கின்றன.

ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

மேலும் இந்த காரில் 170 பிஎச்பி பவரை வழங்ககூடிய 1.4 லிட்டர் மல்டி-ஏர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதும் நமக்கு தெரிய வருகிறது. முந்தைய மாடலை விட இந்த பிஎச்பி அளவானது 10 பிஎச்பி அதிகமாகும். ஜீப் காம்பஸின் பிஎஸ்4 ஸ்போர்ட் வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் நான்கு சக்கரங்களையும் இயக்ககூடிய என்ஜினுடன் விற்பனையாகி வருகிறது.

ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

இதே அம்சங்களை தான் ஜீப் காம்பஸின் பிஎஸ்6 ஸ்போர்ட் வேரியண்ட்டுடன் பெற்றுள்ளதாக இந்த ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் என்ஜினின் டார்க் திறனும் (250 என்எம்) முந்தைய மாடலில் இருந்து அப்படியே இந்த பிஎஸ்6 மாடலுக்கும் தொடர்ந்துள்ளது.

ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

காம்பஸ் மாடலிலேயே அகலம் குறைந்த வேரியண்டாக விளங்கும் ஸ்போர்ட் ட்ரிமில் யு கனெக்ட் உடன் இணைக்கப்பட்ட 5 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 16 இன்ச் ஸ்டீல் வீல்ஸ், குவாட் ஹாலோஜன் ஹெட்லைட்ஸ், உயரத்தை சரி செய்யும் விதத்திலான ஓட்டுனர் இருக்கை மற்றும் ரிமோட்டின் உதவி இன்றி காரின் கதவை திறக்கக்கூடிய தொழிற்நுட்பம் போன்றவற்றை ஜீப் நிறுவனம் வழங்கியுள்ளது.

Most Read:பெட்ரோல் நிரப்பும் குழாய் நீளமாக இருக்கும் ரகசியம் இதுதான்... இந்த மோசடி தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க

ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

பாதுகாப்பு அம்சங்களாக ஓட்டுனர் உள்பட அனைவருக்கும் ஏர்பேக்ஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு உள்ளிட்டவை காம்பஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜீப் நிறுவனம் காம்பஸ் மாடலின் ஐந்து வேரியண்ட்களையும் ரூ.14.99 லட்சத்தில் இருந்து ரூ.23.11 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறது.

Most Read:இதுவரை பார்த்திராத நீளத்தில் 2020 ஹோண்டா சிட்டி சோதனை ஓட்டம்...

ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 அப்டேட் மட்டுமின்றி காம்பஸ் மாடலை 7 இருக்கை வெர்சனிலும் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2021ஆம் ஆண்டின் துவகத்திலோ வெளியிட ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 7 இருக்கை வெர்சனால் காம்பஸ் மாடலில் கொண்டுவரப்படவுள்ள அப்டேட்கள் குறித்து தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

ஜீப் காம்பஸின் இந்த பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் கார் அடுத்த துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்6 மாற்றத்தால் இந்த காரின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass BS6 Petrol Variant Spotted ahead Of Debut
Story first published: Saturday, December 7, 2019, 17:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X