ஜீப் ரெனிகேட் மாடலின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் அறிமுகம்...

ஜீப் நிறுவனம் ரெனிகேட் எஸ்யூவியின் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டிற்கான முன்பதிவுகள் 2020 ஜனவரி மாதத்தில் இருந்தும் டெலிவரிகள் ஜீன் மாதத்தில் இருந்தும் துவங்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜீப் ரெனிகேட் மாடலின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் அறிமுகம்...

ஜீப் நிறுவனம் ரெனிகேட் மாடலின் இந்த புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் 134 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரை பின்புறத்தில் பொருத்தியுள்ளது. இதனால் இந்த கார் முழுவதும் எலக்ட்ரிக் நிலைக்கு மாறியவுடன் ஆற்றலானது பின்புற சக்கரத்திற்கு வழங்கப்படும்.

ஜீப் ரெனிகேட் மாடலின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் அறிமுகம்...

மேலும் இந்த காரில் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 180 பிஎச்பி பவரை 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. எலக்ட்ரிக் மோட்டாரும் கூடுதலாக காரில் பொருத்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் டேங்கின் கொள்ளவு 54 லிட்டரில் இருந்து 39 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

ஜீப் ரெனிகேட் மாடலின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் அறிமுகம்...

இந்த பெட்ரோல் என்ஜின், ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது. ரெனிகேட் மாடலின் இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் 50 கிமீ தூரத்தை 130kmph வேகத்தில் கடக்கும்போது முழுவதும் எலக்ட்ரிக் நிலைக்கு மாற்றப்படும். பெட்ரோல் என்ஜினுடன் பெல்ட்-ஆக்டிவேட்டட் ஜெனரேட்டர் வழங்கப்பட்டுள்ளதால், கார் இயக்கத்தில் இல்லாதபோது தானாக எலக்ட்ரிக் மோட்டார் ரீசார்ஜ் செய்யப்பட்டுவிடும்.

ஜீப் ரெனிகேட் மாடலின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் அறிமுகம்...

காரானது அனைத்து சக்கரங்களிலும் இயக்கப்படும்போது அதிகப்பட்சமாக 240 பிஎச்பி பவரையும் 259 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. இத்தகைய அதிகப்படியான ஆற்றலால் 0லிருந்து 100kmph வேகத்தை வெறும் 7 வினாடிகளில் இந்த புதிய எஸ்யூவி மாடல் கார் பெற்றுவிடும். மேலும் டார்க் திறனும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதால் ரெனிகேட்டின் இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் ஆப்-ரோடிற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

ஜீப் ரெனிகேட் மாடலின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் அறிமுகம்...

இந்த காரில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கார் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டிற்கு மாற்றப்பட்டாலும் இதன் எடை ரெனிகேட் மாடலின் டீசல் வேரியண்ட்டை விட 120கிலோ மட்டும் தான் எடை அதிகமாக உள்ளது. காரின் பின்புற கேபின் பகுதி ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டிற்காக எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை என்று ஜீப் நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

ஜீப் ரெனிகேட் மாடலின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் அறிமுகம்...

மேலும் இந்த ரெனிகேட் மாடலின் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் ட்ரைல் ரேட்டட் வெர்சனை அறிமுகப்படுத்தும் பணியிலும் இந்நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ட்ரைல் ரேட்டட் வெர்சனுக்கு மாற்றப்பட்ட பிறகு 60 சென்டிமீட்டர் ஆழ நீரிலும் எளிதாக இயக்கி செல்ல முடியும்.

ஜீப் ரெனிகேட் மாடலின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் அறிமுகம்...

ரெனிகேட் மாடலின் தற்போதைய தலைமுறை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான எந்த திட்டமும் தற்சமயம் ஜீப் இந்தியா நிறுவனத்திடம் இல்லை. ஆனால் இந்த மாடலின் அடுத்த தலைமுறை கார் இன்னும் 2 வருடங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

ஜீப் ரெனிகேட் மாடலின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் அறிமுகம்...

ரெனிகேட் கார் மட்டுமின்றி பிரபலமான காம்பஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் 2020ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தும் பணியிலும் இந்நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Renegade Plug-In Hybrid Variant Launched, Bookings Start In January
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X