Just In
- just now
இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...
- 17 min ago
டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?
- 1 hr ago
மின்சார கார்களை வரிசை கட்டப்போகும் ஜீப் நிறுவனம்!
- 2 hrs ago
நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!
Don't Miss!
- News
ஹலோ.. சார் பாடி கிடக்கு.. சீக்கிரம் வாங்க.. அதிர வைத்த ரேவரி பயங்கரம்..! பார்ட் 1
- Movies
60 படங்கள், 45 விருதுகள், 17 ஆண்டுகள் தமிழ் சினிமாவை கலக்கும் சென்னை பொண்ணு த்ரிஷா!
- Technology
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 58நாள் வேலிடிட்டி.!
- Finance
இது மிக மோசமான ஆண்டு.. ஆட்டம் காணும் தொலைத் தொடர்பு துறை.. கதறும் வோடபோன் ஐடியா, ஏர்டெல்..!
- Sports
பலமான ஜாம்ஷெட்பூர் அணியை சந்திக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஐஎஸ்எல் தொடரில் சுவாரஸ்ய மோதல்!
- Education
IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு!
- Lifestyle
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறுவனை மகிழ்விக்கபோய் லைசென்ஸை இழந்த ஓட்டுநர்.. என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!
ஓடும் பேருந்தின் கியரை மாற்றி சிறுவன் விளையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அனுமதித்த டிரைவரின் தற்போது நிலை என்பதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புணர்வை மறந்து செயல்படும் சம்பவங்கள் அண்மைக் காலங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. முன்பெல்லாம், பயணிகளை விரைவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக பேருந்துகளை இயக்கியது போன்று, தற்போது தங்களின் தேவைக்காக அருகில் இருப்பவர்களை கியரை மாற்றி பேருந்தை இயக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அந்தவகையில், முன்னதாக கல்லூரி மாணவிகளை பேருந்தின் கியரை மாற்றச் சொல்லி குதூகலித்த ஓட்டுநரை போக்குவரத்து போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரின் ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாதத்திற்கு ரத்தும் செய்தனர். இந்த சம்பவத்தின் சூடு அடங்காதநிலையில், கேரள மாநிலத்தில் இதேபோன்றதொரு மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனால், அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றே கூறலாம்.

ஏனென்றால், இந்த சம்பவத்தில் கேரளவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் சிறுவனை வைத்து ஓடும் பேருந்தின் கியர்களை மாற்றியுள்ளார். அந்த ஓட்டுநரின் பெயர் கேவி சுதீஷ் என தெரியவந்துள்ளது. இந்த குற்றத்திற்காக அவரின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாதங்களுக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்தரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார் கேவி சுதீஷ். இவர் அண்மையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருந்து திருவல்லா-மல்லபள்ளி சாலையில் பயணித்துள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த சிறுவனை வைத்து கியரை மாற்றியதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து இதுகுறித்த தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

மேலும், இந்த வீடியோ கேரள ஆர்டிஓ அதிகாரிகளின் கண்களிலும் பட்டுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கேவி சுதீஷ் சிக்கினார்.
ஓடும் பேருந்தின் கியர்களை சிறுவனை வைத்து மாற்றி சக பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்ட குற்றத்திற்காக, அவரின் ஓட்டுநர் உரிமைத்தை போக்குவரத்து அதிகாரிகள் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பேருந்தின் ஓட்டுநர் கேவி சுதீஷ், பேருந்தின் கியரை சிறுவன் மாற்றியபோது தாங்கள் பொது சாலையில் இல்லையென்றும், மாறாக ஓர் ஆளறவமற்ற விளையாட்டு மைதானத்திலேயே இவ்வாறு செய்ததாகவும் கூறினார். ஆனால், அதிகாரிகள் நடத்திய சோதனையில் இச்சம்பவம் சாலையிலேயே நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவினிலேயே அவரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் இதுபோன்று சக பயணிகளை வைத்து கியரை மாற்ற வைப்பது அல்லது பேருந்தை கட்டுபடுத்த கூறுவது மிகப் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும். பொது சாலையில் அதிக கவனத்துடன் செல்லும்போதே பெரும் விபத்துகள் ஏற்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில், சிறுவர்களை வைத்து கியர்களை மாற்றுவது என்பது நம்மை மட்டுமின்றி சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும்.

இதன்காரணமாகவே முறையான பயற்சிக்கு பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகின்றது. மேலும், ஓட்டுநர் உரிமத்தைப் பெற 18 வயதை பூர்த்தியடைந்திருந்தால் மட்டுமே முடியும் என போக்குவரத்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கேரளாவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் நம்மை பெறும் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது. சிறிய வாகனங்களைக் கட்டுபடுத்தவே பல முதிர்ந்த வயதுடையவர்கள் திணறும்நிலையில், தான் என்ன செய்கின்றோம் என்பதை உணராத சிறுவனை வைத்து கியரை மாற்றியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கேரளாவை சேர்ந்த டிரைவர்கள் இதுபோன்ற விபரீத சம்பவங்களில் ஈடுபடுவது இது ஒன்று முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக சமீபத்தில் அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்த பஸ் டிரைவர் மற்றும் கார் டிரைவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கேரள பஸ் ஒன்று பள்ளி மைதானத்தில் ஸ்டண்ட்டில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் வைரலாக பரவியது. இது டூரீஸ்ட் பஸ் ஆகும். சுற்றுலா செல்வதற்காக இந்த பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி மைதானத்தில் மிகவும் அபாயகரமான முறையில் அந்த பஸ் இயக்கப்பட்டது. இதன்பின் ஒரு கார் மற்றும் சில பைக்குகள் அந்த பஸ்சுடன் இணைந்து கொண்டு அதே இடத்தில் ஸ்டண்ட் செய்தன.

இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, பஸ் டிரைவர் மற்றும் கார் டிரைவர் ஆகிய இருவரும் கேரளா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில், ஸ்டண்ட் செய்த பஸ் டிரைவரின் பெயர் ரஞ்சு என்று தெரியவந்துள்ளது. இந்த பஸ் ஸ்டண்ட் நடந்த இடத்திற்கு அருகில் கார் ஒன்றும் அபாயகரமான ஸ்டண்ட்டில் ஈடுபட்டது.

அதன் டிரைவரான அபிஷேத் என்பவரும் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 22 வயது மட்டுமே ஆகிறது. பெயில் கட்டணத்தை செலுத்திய பின் இரண்டு டிரைவர்களும் விடுவிக்கப்பட்டனர். கேரளாவின் மோட்டார் வாகன துறை பஸ்ஸை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. அதே சமயம் கார் டிரைவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் சுற்றுலாவிற்காக பள்ளியால் இந்த டூரிஸ்ட் பஸ் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ வைரலாக பரவிய பின்பு, டூர் சென்ற பஸ் திரும்ப வருவதற்காக மோட்டார் வாகன துறை அதிகாரிகள் காத்திருந்தனர். அந்த பஸ் திரும்பிய உடனேயே அதிகாரிகள் அதனை அதிரடியாக பறிமுதல் செய்து விட்டனர்.

அந்த பஸ்ஸின் ஆர்சி புக்கையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த டிரைவரின் டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. தற்போது மோட்டார் வாகன துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பஸ்ஸில் ஸ்பீடு கவர்னர்கள் இல்லாமல் இருந்ததும் அதிகாரிகளின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கனரக வாகனங்களில் ஸ்பீடு கவர்னர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்கள் குறிப்பிட்ட ஸ்பீட் லிமிட்டை கடக்காமல் இருப்பதை இது உறுதி செய்கிறது. மேலும் பிரஷர் ஹாரன்கள், லவுடு ஸ்பீக்கர்கள் ஆகியவையும் அந்த பஸ்ஸில் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மோட்டார் வாகன துறை விதிகளின்படி இவை அனைத்தும் சட்ட விரோதம். இந்த வீடியோவில் டூவீலர்களும் ஸ்டண்ட் செய்துள்ளன. எனவே அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்த 7 பைக்குகளை மோட்டார் வாகன துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோவில் இருந்த மற்ற பைக்குகளின் பதிவு எண்ணை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே மற்ற பைக்குகளும் பறிமுதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் இதுபோல் வாகனங்களை மாடிபிகேஷன் செய்து அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.