இன்னோவா பிரியர்களை வளைத்து போட ஆட்டத்தை ஆரம்பித்தது கியா... கார்னிவல் காரின் முதல் டீசரை வெளியிட்டது

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய கியா கார்னிவல் காரின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்னோவா பிரியர்களின் கவனத்தை ஈர்க்க கார்னிவல் காரின் டீசரை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்!

கடந்த ஆகஸ்ட் மாதம் செல்டோஸ் எஸ்யூவியுடன் இந்திய மார்க்கெட்டில் வர்த்தகத்தை துவங்கியது கியா மோட்டார்ஸ் நிறுவனம். செல்டோஸ் காரின் விற்பனை தூள் கிளப்பி வருவதால், அதே உற்சாகத்துடன் இரண்டாவது கார் மாடலையும் இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது கியா மோட்டார்ஸ்.

இன்னோவா பிரியர்களின் கவனத்தை ஈர்க்க கார்னிவல் காரின் டீசரை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்!

இதன்படி, கார்னிவல் என்ற பிரமீயம் எம்பிவி ரக கார் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது கியா மோட்டார்ஸ். வெளிநாடுகளில் செடோனா மற்றும் க்ராண்ட் செடோனா ஆகிய பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பிரிமீயம் ரக எம்பிவி கார் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

இன்னோவா பிரியர்களின் கவனத்தை ஈர்க்க கார்னிவல் காரின் டீசரை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்!

இந்த நிலையில், விரைவில் வருவதை கட்டியங்கூறும் வகையில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான முதல் டீசரை கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள மாடலைவிட இந்தியாவில் வரும் மாடலில் சில சிறிய அளவிலான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும்.

இன்னோவா பிரியர்களின் கவனத்தை ஈர்க்க கார்னிவல் காரின் டீசரை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்!

ஹெட்லைட் க்ளஸ்ட்டர், க்ரில் அமைப்பு, பகல்நேர விளக்குகளின் டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்திலும் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்காக 10.1 அங்குல டிவி திரைகள், இரண்டு சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த காரில் பல்முனை பாதுகாப்பை வழங்கும் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.

MOST READ: இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

இன்னோவா பிரியர்களின் கவனத்தை ஈர்க்க கார்னிவல் காரின் டீசரை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்!

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரான 2.2 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 எச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

MOST READ: 5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை.. மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா?

இன்னோவா பிரியர்களின் கவனத்தை ஈர்க்க கார்னிவல் காரின் டீசரை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்!

கியா கார்னிவல் கார் வெளிநாடுகளில் 7 இருக்கைகள், 8 இருக்கைகள் மற்றும் 11 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 6 இருக்கைகள், 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: பலே, சென்னை போலீஸுக்கு கூடுதல் பலம்... ரோந்து பணியில் இணைந்த புதுவித வாகனம்...

இன்னோவா பிரியர்களின் கவனத்தை ஈர்க்க கார்னிவல் காரின் டீசரை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்!

புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். ஆனால், இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட விலை அதிகமாக இருக்கும். ரூ.30 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Kia Motors India has released a first teaser of Carnival MPV ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X