கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் எப்போது?... புதிய தகவல்கள்

ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவியுடன் விரைவில் தனது வர்த்தகத்தை இந்தியாவில் துவங்க இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, இரண்டாவது கார் மாடலாக கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் எப்போது?... புதிய தகவல்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சரிநிகரான எம்பிவி கார் மாடலாக கியா கார்னிவல் வர இருக்கிறது. வெளிநாடுகளில் செடோனா என்ற பெயரிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அதிக இடவசதி மற்றும் பிரிமீயம் அம்சங்களுடன் கியா கார்னிவல் வர இருக்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் எப்போது?... புதிய தகவல்கள்

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சிறிய அளவிலான மாறுதல்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இந்தியாவில் கியா கார்னிவல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் எப்போது?... புதிய தகவல்கள்

கியா கார்னிவல் எம்பிவி கார் 5,155 மிமீ நீளமும், 1,985 மிமீ அகலமும், 1740 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்த காரின் வீல்பேஸ் 3,060 மிமீ. அதாவது, பரிமாணத்தில் இன்னோவா க்ரிஸ்ட்டாவாவைவிட பெரிய கார் மாடலாக இருக்கிறது கார்னிவல். இதனால், உட்புறத்தில் இன்னோவா க்ரிஸ்ட்டாவைவிட அதிக இடவசதி கொண்ட மாடலாக இருக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் எப்போது?... புதிய தகவல்கள்

கியா கார்னிவல் எம்பிவி கார் வெளிநாடுகளில் 7 சீட்டர், 8 சீட்டர், 9 சீட்டர் மற்றும் 11 சீட்டர் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 7 சீட்டர் அல்லது 8 சீட்டர் மாடல்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் எப்போது?... புதிய தகவல்கள்

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 199 பிஎச்பி பவரையும் 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. முன்சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்படும்.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் எப்போது?... புதிய தகவல்கள்

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்டட் இணைய தொழில்நுட்ப வசதி, பின் இருக்கை பயணிகளுக்கான தனி டிவி திரைகள் ஆகியவை இடம்பெறும். இதுதவிர, சிறந்த பாதுகாப்பு அம்சசங்களையும் இந்த கார் பெற்றிருக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் எப்போது?... புதிய தகவல்கள்

இந்திய எம்பிவி கார் மார்க்கெட்டில் மிக பிரிமீயம் மாடலாக கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.

கியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுகம் எப்போது?... புதிய தகவல்கள்

புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறந்த மாற்று தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autocarindia

Most Read Articles
English summary
Following the Seltos SUV, Kia Motor will introduce the Carnival MPV in India by early next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X