ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை... இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக மாறிய கியா மோட்டார்ஸ்!

ஒரே ஒரு கார் மாடலை வைத்துக் கொண்டு இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது கியா மோட்டார்ஸ் நிறுவனம். அதுவும் மூன்று மாதங்களில் இந்த சாதனையை கியா படைத்துள்ள போட்டியாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை... இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக மாறிய கியா மோட்டார்ஸ்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் செல்டோஸ் என்ற எஸ்யூவி வகை காருடன் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்கியது. ஆரம்பமே இந்த நிறுவனத்திற்கு அமர்க்களமாக அமைந்தது. செல்டோஸ் காருக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை... இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக மாறிய கியா மோட்டார்ஸ்!

இந்தநிலையில், கடந்த மாதம் 12,850 செல்டோஸ் கார்களை விற்பனை செய்து கியா மோட்டார்ஸ் அசத்தி இருக்கிறது. மேலும், ஒரே ஒரு கார் மாடலை வைத்துக் கொண்டு இந்தியாவில் மிக நீண்டகாலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹோண்டா, டொயோட்டா கார் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி கார் விற்பனையில் இந்தியாவின் 5வது பெரிய நிறுவனமாக மாறி இருக்கிறது.

ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை... இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக மாறிய கியா மோட்டார்ஸ்!

கடந்த மாதம் மாருதி நிறுவனம் 1,39,000 கார்களை விற்பனை செய்து முதலிடத்தை பிடித்தது. நீண்ட காலத்திற்கு பின்னர் மாருதி விற்பனையில் சற்று ஏற்றம் பெற்றது. இரண்டாவது இடத்தில் 50,000 கார்களை விற்பனை செய்த ஹூண்டாய் உள்ளது.

ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை... இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக மாறிய கியா மோட்டார்ஸ்!

மூன்றாவது இடத்தில் 18,460 கார்களை விற்பனை செய்த மஹிந்திரா நிறுவனமும், நான்காவது இடத்தில் 13,200 கார்களை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளன. இந்த நிலையில், 12,850 கார்களை விற்பனை செய்த கியா மோட்டார்ஸ் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதுவும் இந்திய சந்தையில் கால் பதித்து இரண்டே மாதங்களில் ஒரே ஒரு கார் மாடல் மூலமாக இந்த சாதனையை படைத்துள்ளது.

MOST READ: போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை... இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக மாறிய கியா மோட்டார்ஸ்!

ஆறாவது இடத்தில் 11,866 கார்களை விற்பனை செய்துள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனமும், ஏழாவது இடத்தில் 11,500 கார்களை விற்பனை செய்துள்ள ரெனோ நிறுவனமும் இடம்பிடித்தன. 10,010 கார்களை விற்பனை செய்த ஹோண்டா நிறுவனம் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மாதத்திற்கு மாதம் ஹோண்டாவின் விற்பனை கடும் தடுமாற்றத்தையும், சரிவையும் சந்தித்து வருகிறது.

MOST READ: தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை... இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக மாறிய கியா மோட்டார்ஸ்!

கடந்த மாதம் ஒன்பதாவது இடத்தில் 7,077 கார்களை விற்பனை செய்த ஃபோர்டு நிறுவனமும், பத்தாவது இடத்தில் 3,536 கார்களை விற்பனை செய்துள்ள எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனமும் பிடித்துள்ளன. இதைத்தொடர்ந்து, 11வது இடத்தில் 3,213 கார்களை விற்பனை செய்துள்ள ஃபோக்ஸ்வேகன் உள்ளது.

MOST READ: இன்னும் சரியாக பத்தே நாட்கள்தான்... பழைய வாகனங்களின் கதை முடிகிறது... மத்திய அரசு அதிரடி திட்டம்...

ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை... இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக மாறிய கியா மோட்டார்ஸ்!

பட்டியலின் கடைசியில் நிஸான், ஸ்கோடா, ஃபியட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்து கடைசியில் உள்ளன. கடந்த மாதம் நிஸான் நிறுவனம் 1,581 கார்களையும், ஸ்கோடா ஆட்டோ 1,300 கார்களையும், ஃபியட் 854 கார்களையும் விற்பனை செய்துள்ளன.

Source: ET Auto

Most Read Articles

English summary
South Korean carmaker Kia Motors has entered into the list of top five carmakers in India in terms of market share and sales numbers in October, 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X