மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக எம்பிவி காரை களமிறக்க கியா திட்டம்!

மாருதி எர்டிகா காருக்கு இணையான ரகத்தில் புதிய எமபிவி காரை அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக எம்பிவி காரை களமிறக்க கியா திட்டம்!

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக எம்பிவி காரை களமிறக்க கியா திட்டம்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் நேற்று தனது முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி வரும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

kia-plans-to-launch-new-mpv-car-model-in-india

இந்த நிலையில், செல்டோஸ் அறிமுக நிகழ்ச்சியின்போது ஆட்டோகார் இந்தியா தளத்திற்கு பேட்டியளித்த கியா நிறுவனத்தின் சிஇஓ ஹான் வூ பார்க்," இந்தியாவில் எங்களது பிராண்டை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த மாடலாக எம்பிவி காரை அறிமுகம் செய்வது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

kia-plans-to-launch-new-mpv-car-model-in-india

கியா செல்டோஸ் எஸ்யூவி கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் புதிய எம்பிவி காரை உருவாக்குவதற்கான திட்டமும் கியா மோட்டார்ஸிடம் உள்ளது. ஏனெனில், விரைவில் 7 சீட்டர் செல்டோஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கு கியா பரிசீலீத்து வருகிறது.

kia-plans-to-launch-new-mpv-car-model-in-india

அதே அடிப்படையில் புதிய எம்பிவி காரையும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பையும் தற்போது தீவிரமாக பரிசீலீத்து வருகிறது. இதற்கான, முதலீடும் மிக அதிகம் இருக்காது என்பதால், இது நிச்சயம் சாத்தியப்படும் திட்டமாக கருதப்படுகிறது.

kia-plans-to-launch-new-mpv-car-model-in-india

புதிய எம்பிவி காரை இந்தியா மட்டுமின்றி, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வர்த்தக திட்டம் குறித்தும் கியா மோட்டார்ஸ் ஆய்வு செய்து வருகிறது. இதனால், விற்பனையை மிக சீக்கிரமாகவே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுவிட முடியும் என்று கியா நிறுவனம் கருதுகிறது.

kia-plans-to-launch-new-mpv-car-model-in-india

புதிய எம்பிவி கார் மாடலானது 7 பேர் செல்வதற்கான போதிய இடவசதியுடன் பிரிமீயம் அம்சங்களுடன் கொண்டு வரப்படும். மாருதி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ கார்களை நேரடியாக குறிவைத்து களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது.

kia-plans-to-launch-new-mpv-car-model-in-india

இதுதவிர, சொகுசு மாடலாக இருக்கும் கார்னிவல் எம்பிவி காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எம்பிவி கார் மாடல் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் போட்டி போடும்.

Note: Images for representation purpose only

Most Read Articles
English summary
KIA Motors is considering to launch all new MPV car in India. It will be based on Seltos platform.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X