கியா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்டம் - வீடியோ

கியா காம்பேக்ட் எஸ்யூவி தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த காரின் வீடியோ மற்றும் இதர தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் செல்டோஸ் எஸ்யூவி காருடன் இந்திய சந்தையில் கால் பதித்தது. எதிர்பார்ப்பை விஞ்சிய அளவுக்கு செல்டோஸ் காருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த உற்சாகத்துடன் அடுத்து கார்னிவல் எம்பிவி காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விரைவில் களமிறக்க உள்ளது.

கியா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்டம் - வீடியோ

இதனுடன் சேர்த்து புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றையும் காட்சிப்படுத்த கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காரின் அடிப்படையிலான இந்த மாடல் மிகவும் பிரிமீயமான மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்டம் - வீடியோ

கியா QYI என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய மாடலானது தற்போது தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி அருகே சோதனையில் வைக்கப்பட்டு இருந்த கியா காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

கியா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்டம் - வீடியோ

இதில், கியா காம்பேக்ட் எஸ்யூவியில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், ஸ்டாப் லைட், இரட்டை வண்ண சைடு மிரர்கள், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் பம்பரில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பதால், இந்த வீடியோவில் போதிய அளவு சிறப்பம்சங்களை பார்க்க முடியவில்லை.

எனினும், இது ஹூண்டாய் வெனியூ காரைவிட டிசைனிலும், சிறப்பம்சங்களிலும் சிறப்பம்சங்களிலும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செல்டோஸ் காரை போலவே, இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியிலும் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு மாடல்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கியா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்டம் - வீடியோ

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். எனினும், இதில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

இந்த கார் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். ரூ.7.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The upcoming Kia QYI SUV was spotted yet again while it was testing in the Delhi-NCR region. Spy pics reveal a heavily camouflaged vehicle that has a modern crossover profile, unlike a conventional SUVs boxy stance.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X