புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் முறைப்படி துவங்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவும் குவிந்து வருகிறது.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டிய புதிய கியா செல்டோஸ் கார் இன்று வண்ணமயமான விழாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.9.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய கியா செல்டோஸ் கார் கார் மார்க்கெட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

வாகனத் துறை மிக இக்கட்டான சூழலில் தத்தளித்து வரும் நிலையில், இந்த காருக்கு இதுவரை 32,000 பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளதாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், எம்ஜி ஹெக்டர் போல அல்லாமல், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாக டெலிவிரி கொடுப்பதற்கான முயற்சியில் கியா மோட்டார் இறங்கியுள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

கடந்த 8ந் தேதி கியா செல்டோஸ் காரின் உற்பத்தி ஆந்திர மாநிலம், அனந்தபூரில் உள்ள கியா ஆலையில் துவங்கியது. இதுவரை 5,000 செல்டோஸ் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், இரண்டாவது ஷிஃப்டில் செல்டோஸ் காரின் உற்பத்தியை துவங்குவதற்கும் கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

அதன்படி, இன்று கியா செல்டோஸ் காரின் அறிமுக விழா நடந்த மேடையிலேயே முதல் வாடிக்கையாளர்களுக்கு செல்டோஸ் கார் டெலிவிரி கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாடுமுழுவதும் உள்ள அனைத்து கியா ஷோரூம்களிலும் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று தெரிகிறது.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

தற்போதைக்கு கியா செல்டோஸ் காரை முன்பதிவு செய்வோருக்கு ஒரு சில மாதங்களில் டெலிவிரி கொடுக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. எனவே, முதலில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 2 மாதங்களுக்கு உள்ளாகவே டெலிவிரி பெறும் வாய்ப்பும் உள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

மேலும், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட போட்டியாளர்களை விட குறைவான விலையில் வந்திருப்பதால், வரும் நாட்களில் முன்பதிவு கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது. மேலும், எம்ஜி ஹெக்டருக்கு முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், அதற்கான வாடிக்கையாளர்கள் கியா செல்டோஸ் காரை கையில் எடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

புதிய கியா செல்டோஸ் காரின் டெக் லைன் மாடலானது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். ஜிடி லைன் மாடலானது 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கும். அனைத்து எஞ்சின் தேர்வுகளிலும் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைப்பது இதன் சாதகமான விஷயம்.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்படுகின்றன. இரட்டை குழல் சைலென்சர்கள், 17 அங்குல அலாய் வீல்கள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ செயலி மூலமாக பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

இந்த காரில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, போஸ் சர்ரவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், 360 கேமரா உள்ளிட்ட எக்கச்சக்கமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

புதிய கியா செல்டோஸ் கார் 4,315 மிமீ நீளமும், 1,620 மிமீ அகலமும், 1,800 மிமீ நீளமும் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 2,610 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. மேலும், 433 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது!

புதி கியா செல்டோஸ் கார் ரூ.9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர், நிஸான் கிக்ஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய கார்களுடன் போட்டிபோடும்.

Most Read Articles
English summary
All New KIA Selots SUV's' Bookings has crossed 32,000 units in India.
Story first published: Thursday, August 22, 2019, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X