கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

கியா செல்டோஸ் காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில், தற்போது புதிய மைல்கல்லை கடந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் கார் இந்தியாவின் சூப்பர் ஹிட் மாடலாக மாறி இருக்கிறது. அந்நிறுவனத்தின் முதல் கார் மாடலாக வெளியிடப்பட்ட கியா செல்டோஸ் காருக்கு துவக்கத்திலிருந்தே வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

அட்டகாசமான டிசைன், ஆர்ப்பரிக்கும் வசதிகள், சரியான விலையில் வந்த இந்த காருக்கு முன்பதிவு தொடர்ந்து கணிசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது முன்பதிவு 60,000 என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இது கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

இந்த காருக்கு வந்துள்ள 60,000 முன்பதிவுகளில் 60 சதவீதத்திற்கு மேல் நாட்டின் 10 முக்கிய நகரங்களில் இருந்து மட்டும் கிடைத்துள்ளதாகவும், மீதமுள்ள முன்பதிவுகள் இரண்டாம் நிலை நகரங்களிலிருந்து கிடைத்துள்ளதாகவும் கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், டீலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இதன்மூலமாக, அதிக புக்கிங்குகளை பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

மேலும், முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து செல்டோஸ் காரை டெலிவிரி கொடுக்கும் பணிகளிலும் கியா மோட்டார் தீவிரம் காட்டி வருகிறது. ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள கியா கார் ஆலையில் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை கியா எடுத்து வருகிறது.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

தற்போது 1,000 தொழிலாளர்களுடன் அனந்த்பூர் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், செல்டோஸ் காரின் காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் வைக்கும் விதத்தில், உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளில் கியா மோட்டார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

மேலும், ஆறு மாதத்திற்கு ஒரு புதிய காரை அறிமுகப்படுத்துவதற்கு கியா மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தக்கவாறு, தற்போது ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அனந்த்பூர் ஆலையை ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி திறன் கொண்டதாக மாற்றுவதற்கான விரிவாக்க முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

கியா செல்டோஸ் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், இன்டர்நெட் வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப் , சாய்மான வசதியுடன் இருக்கைகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, யுவோ செயலி மூலமாக கட்டுப்படுத்தும் வசதி, 360 டிகிரி கேமரா, ஏர் பியூரிஃபயர், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றுள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அனைத்து எஞ்சின்களிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகளில் வருகிறது.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

செல்டோஸ் எஸ்யூவிக்கு கிடைத்துள்ள வெற்றியை தொடர்ந்து அடுத்து கார்னிவல் எம்பிவி காரை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக இந்த புதிய மாடல் இருக்கும்.

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

இதைத்தொடர்ந்து, ஹூண்டாய் வெனியூ காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தையொட்டி அறிமுகம் செய்வதற்கும் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கார் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாக இருக்கும். இதுவும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு கொண்டு வரப்படும்.

Source: ET Auto

Most Read Articles
English summary
KIA Motor has revealed all new Seltos SUV is garnered over 60,000 bookings since its launch in India.
Story first published: Wednesday, October 23, 2019, 12:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X