எஸ்யூவி விற்பனையில் போட்டியாளர்கள் அனைவரையும் முந்தி முன்னிலை பெற்ற கியா செல்டோஸ்!

போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் முந்தி கடந்த செப்டம்பர் மாத எஸ்யூவி கார் விற்பனையில் கியா செல்டோஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கடந்த மாதம் மட்டுமல்லாமல் இந்த வரிசையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக கியா செல்டோஸ் நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது.

எஸ்யூவி விற்பனையில் போட்டியாளர்கள் அனைவரையும் முந்தி முன்னிலை பெற்ற கியா செல்டோஸ்!

ஆகஸ்ட்டில் 6,236 யூனிட்கள் விற்பனையான கியா செல்டோஸ் கார்கள் கடந்த மாதத்தில் 7,754 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இதிலிருந்து ஆகஸ்ட்டை விட கடந்த மாதம் அதிக யூனிட்கள் கியா செல்டோஸ் கார்கள் விற்பனையாகியுள்ளது தெரிய வருகிறது.

எஸ்யூவி விற்பனையில் போட்டியாளர்கள் அனைவரையும் முந்தி முன்னிலை பெற்ற கியா செல்டோஸ்!

இதன்மூலம் 2019 செப்டம்பர் மாத விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர், டாடா ஹரியர், ஜீப் காம்பஸ் போன்ற முன்னணி நிறுவனங்களை முந்தியுள்ளது, கியா மோட்டார்ஸ் நிறுவனம். குறிப்பாக எஸ்யூவி கார்களின் விற்பனையில் 4 மீட்டர் எஸ்யூவி கார்களான ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்றவற்றை தோற்கடித்துள்ளது.

எஸ்யூவி விற்பனையில் போட்டியாளர்கள் அனைவரையும் முந்தி முன்னிலை பெற்ற கியா செல்டோஸ்!

இதனால் வாடிக்கையாளர்களுக்கு கியா செல்டோஸின் தேவை அதிகரிக்க காத்திருப்பு காலத்தை 2 மாதங்களாக அதிகரித்துள்ளது. இந்த வகையில் இந்நிறுவனம் 40 ஆயிரம் புக்கிங்களை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளது.

எஸ்யூவி விற்பனையில் போட்டியாளர்கள் அனைவரையும் முந்தி முன்னிலை பெற்ற கியா செல்டோஸ்!

கியா செல்டோஸ் மாடல் கார் அறிமுகமான போது டெக் லைன், ஜிடி லைன் என இரு வகைகளில் வெளியாகியிருந்தது. இதில் டெக் லைன், எச்டிஇ, எச்டிகே, எச்டிகே ப்ளஸ், எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஎக்ஸ் ப்ளஸ் என ஐந்து வேரியண்ட்களிலும் ஜிடி லைன், ஜிடிகே மற்றும் ஜிடிஎக்ஸ் என இரு வேரியண்ட்களிலும் வெளியாகியிருந்தது.

எஸ்யூவி விற்பனையில் போட்டியாளர்கள் அனைவரையும் முந்தி முன்னிலை பெற்ற கியா செல்டோஸ்!

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க செல்டோஸின் டாப் வேரியண்ட்டாக ஜிடிஎக்ஸ்+, டிசிடி கியர்பாக்ஸ் மற்றும் டீசல் என்ஜின் அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் கியா செல்டோஸின் மொத்த 16 வேரியண்ட்களிலும் 3 என்ஜின் மற்றும் 4 ட்ரான்ஸ்மிஷன் அமைப்புகள் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன.

Most Read:நாளை அறிமுகமாகவுள்ள டாடா டியாகோ விஸ் எடிசனின் புதிய டீசர் வெளியானது...

எஸ்யூவி விற்பனையில் போட்டியாளர்கள் அனைவரையும் முந்தி முன்னிலை பெற்ற கியா செல்டோஸ்!

செல்டோஸ் ஜிடிஎக்ஸ்+ பெட்ரோல் டிசிடி மேனுவல் வேரியண்ட்டின் ப்ரீமியம் விலை ரூ.1 லட்சமாகவும், மற்ற ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் விலை டாடா ஹரியர் மற்றும் எம்ஜி ஹெக்டரை விட விலையுயர்ந்ததாக ரூ.9.69 லட்சத்தில் இருந்து ரூ.16.99 லட்சம் வரை விற்கப்படுகிறது.

எஸ்யூவி விற்பனையில் போட்டியாளர்கள் அனைவரையும் முந்தி முன்னிலை பெற்ற கியா செல்டோஸ்!

இக்காரின் பிஎஸ்விஐ அமைப்பில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 115 பிஎஸ் பவரையும் 144 என்எம் டார்க் திறனையும் 1.5 லிட்டர் விஜிடி டீசல் என்ஜின் 115 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகின்றன. இதில் மூன்றாவதாக உள்ள 1.4 லிட்டர் டர்போ ஜிடிடி பெட்ரோல் என்ஜின் 140 பிஎஸ் பவர் மற்றும் 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

Most Read:இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இவர்தான்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்...

எஸ்யூவி விற்பனையில் போட்டியாளர்கள் அனைவரையும் முந்தி முன்னிலை பெற்ற கியா செல்டோஸ்!

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் 6 நிலை வேகத்திற்குரிய கியர்பாக்ஸையும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் கொண்டுள்ளது. அதேநேரத்தில் 1.5 லிட்டர் விஜிடி டீசல் என்ஜினுடன் 6 நிலை வேகத்திற்குரிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களும் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜிடிடி பெட்ரோல் என்ஜினுடன் 7 நிலை வேக டிசிடி கியர்பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் எம்ஜி ஹெக்டரும் அசத்தல்!

இந்திய கார் சந்தை மிக சுணக்கமான நிலையை கடந்து வரும் இவ்வேளையில், கியா செல்டோஸ் கார் போலவே, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியும் விற்பனையில் அசத்தி இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் 1,508 ஹெக்டர் கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

விற்பனையில் எம்ஜி ஹெக்டரும் அசத்தல்!

அதன்பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த விற்பனை எண்ணிக்கை 2,018 யூனிட்களாக அதிகரித்தது. கடந்த மாதம் அதாவது செப்டம்பரில், எம்ஜி நிறுவனம் மொத்தம் 2,608 ஹெக்டர் கார்களை விற்பனை செய்துள்ளது. விற்பனைக்கு அறிமுகமானது முதல் எம்ஜி ஹெக்டர் கார் பதிவு செய்த அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை இதுதான்.

விற்பனையில் எம்ஜி ஹெக்டரும் அசத்தல்!

டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகியவைதான் எம்ஜி ஹெக்டர் காரின் போட்டியாளர்கள். இதில், டாடா ஹாரியர் காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை 2,500 யூனிட்கள். டாடா ஹாரியர் கார் இந்த சிறப்பான மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை கடந்த மார்ச் மாதம் பதிவு செய்திருந்தது.

விற்பனையில் எம்ஜி ஹெக்டரும் அசத்தல்!

ஆனால் தற்போது எம்ஜி ஹெக்டர் கார் அதனை வீழ்த்தியுள்ளது. இதனிடையே ஹெக்டர் காரின் மூன்று வரிசை வேரியண்ட்டை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையில் எம்ஜி ஹெக்டரும் அசத்தல்!

எனினும் அதற்கு முன்னதாக இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி களமிறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 லட்ச ரூபாய் என்ற விலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையில் எம்ஜி ஹெக்டரும் அசத்தல்!

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக இங்கிலாந்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அங்கு டெலிவரியும் கூட தொடங்கப்பட்டு விட்டது. இந்தியாவை பொறுத்தவரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.

Most Read Articles

English summary
Kia Seltos Sales In India For September 2019: Extends Lead In Mid-Size SUV Segment With 7,750 Units
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X