முதல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்ட கியா... வாடிக்கையாளர்கள் உற்சாகம்

இந்திய மார்க்கெட்டிற்கான கியா நிறுவனத்தின் முதல் காரான செல்டோஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்ட கியா... வாடிக்கையாளர்கள் உற்சாகம்

தென் கொரியாவின் சியோல் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கியா நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளிலும் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஹூண்டாய் மோட்டார் கம்பெனியின் ஒரு அங்கமாக கியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த சூழலில் கியா நிறுவனம் இந்திய மார்க்கெட்டிலும் கால் பதிக்க முடிவு செய்தது.

முதல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்ட கியா... வாடிக்கையாளர்கள் உற்சாகம்

ஆரம்பத்தில் தமிழகத்தில்தான் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை அமையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின் திடீரென ஆந்திர மாநிலம் அனந்த்பூர் பகுதியில் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. கியா தொழிற்சாலை தமிழகத்தின் கையை விட்டு நழுவி போனதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

முதல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்ட கியா... வாடிக்கையாளர்கள் உற்சாகம்

இந்த சூழலில் கியா நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி காரை கடந்த ஜூன் 20ம் தேதி அறிமுகம் செய்தது. இதுதான் இந்திய மார்க்கெட்டிற்கான கியா நிறுவனத்தின் முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் செல்டோஸ் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி தொடர்பான தகவல்களை கியா நிறுவனம் அப்போது வெளியிடவில்லை.

முதல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்ட கியா... வாடிக்கையாளர்கள் உற்சாகம்

இந்த சூழலில் செல்டோஸ் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை கியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதன்படி வரும் ஆகஸ்ட் 22ம் தேதி கியா செல்டோஸ் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது. அதற்கு முன்னதாக வரும் ஜூலை மாத மத்தியில் கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்ட கியா... வாடிக்கையாளர்கள் உற்சாகம்

இதனிடையே செல்டோஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில், இந்தியாவின் 160 நகரங்களில், 265 டச்பாயிண்ட்களை கியா நிறுவனம் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை வரும் 2020ம் ஆண்டில் 300 ஆகவும், 2021ம் ஆண்டில் 350 ஆகவும் உயர்த்தப்படும். ஹூண்டாய் கிரெட்டா, நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட கார்களுடன் கியா செல்டோஸ் கார் போட்டியிடவுள்ளது.

முதல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்ட கியா... வாடிக்கையாளர்கள் உற்சாகம்

இதுதவிர டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுக்கும் கியா செல்டோஸ் கடுமையான சவால் அளிக்கவுள்ளது. இதில், எம்ஜி ஹெக்டர் கார் இந்திய மார்க்கெட்டில் இன்றுதான் (ஜூன் 27) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முதல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்ட கியா... வாடிக்கையாளர்கள் உற்சாகம்

ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் கியா செல்டோஸ் கார் எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ் காரில், 10.25 இன்ச் டச் ஸ்கீரின், 360 டிகிரி கேமரா, 8 ஸ்பீக்கர் பாஸ் சவுண்ட் சிஸ்டம், ஹெட் அப் டிஸ்ப்ளே, மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய டிரைவர் இருக்கை, ஏர் ப்யூரிஃபையர், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரியர் ஏசி வெண்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படவுள்ளன.

முதல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை வெளியிட்ட கியா... வாடிக்கையாளர்கள் உற்சாகம்

பாதுகாப்பு வசதிகள் என எடுத்து கொண்டால், கியா செல்டோஸ் காரில் 6 ஏர் பேக்குகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படவுள்ளன. கியா நிறுவனம் செல்டோஸ் காரில், 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கவுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக், சிவிடி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி என மொத்தம் 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கியா செல்டோஸ் காரில் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles
English summary
Kia Seltos SUV To Launch On August 22. Read in Tamil
Story first published: Thursday, June 27, 2019, 20:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X