இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

இந்தியர்கள் மத்தியில் ஆவலை அதிகரித்துள்ள கியா செல்டோஸ் கார் தென் கொரியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

தென் கொரியாவை சேர்ந்த புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று கியா மோட்டார்ஸ். தென் கொரியாவின் சியோல் நகரை தலைமையிடமாக கொண்டு கியா மோட்டார்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. அதே தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு அங்கம்தான் கியா மோட்டார்ஸ். இந்நிறுவனத்தின் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

இந்த சூழலில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கான கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் செல்டோஸ். இது எஸ்யூவி ரக கார் ஆகும்.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

கியா செல்டோஸ் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் 22ம் தேதி கியா செல்டோஸ் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் காரை தனது ஹோம் மார்க்கெட்டான தென் கொரியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

தென் கொரிய மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் விலை KRW 19.3 மில்லியனில் இருந்து தொடங்குகிறது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 11.35 லட்ச ரூபாய். கியா செல்டோஸ் கார் இந்திய மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடவுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

இதில் எம்ஜி ஹெக்டர் கார் இந்திய மார்க்கெட்டில் நேற்றுதான் (ஜூன் 27) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காருக்கு மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என குறிப்பிடப்படும் எம்ஜி ஹெக்டரின் ஆரம்ப விலை 12.18 லட்ச ரூபாய் மட்டும்தான். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

ஆனால் கியா நிறுவனம் செல்டோஸ் காரின் விலையை இதைக்காட்டிலும் குறைவாகதான் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ் கார் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட வசதிகளை பெறவுள்ளது. இதுதவிர சன் ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், லெதர் இருக்கைகள் ஆகிய வசதிகளும் கியா செல்டோஸ் காரில் வழங்கப்படவுள்ளன.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

கியா செல்டோஸ் காரின் டிரைவர் இருக்கையை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதில், 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் கியா செல்டோஸ் காரில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இதன் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறவுள்ளது. அதே சமயம் கியா செல்டோஸ் காரின் டீசல் வேரியண்ட்கள் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினை பெறவுள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கியா கார் தென் கொரியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

இந்த இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இதுதவிர 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினும் கியா செல்டோஸ் காரில் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 242 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது.

Most Read Articles
English summary
Kia Seltos SUV Launched In South Korea. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X