Just In
- 17 min ago
இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
- 2 hrs ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
- 2 hrs ago
10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...
- 2 hrs ago
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" சினிமா பாணியில் பதிலளித்த பாஜக எம்பி! என்னதான் ஆச்சு இவர்களுக்கு..!
Don't Miss!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- News
சூரிய கிரகணம்: சுசிந்திரம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் டிச.25ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி
- Finance
டீசல்-இன் அவசியம் இனி இல்லை.. இந்தியாவில் புதிய மாற்றம்..!
- Movies
நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை? பரபரக்கும் கைலாசா!
- Technology
இனி குழப்பம் வேண்டாம்? ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள்
- Sports
ரசிகர்களின் கிண்டலை பந்த் எதிர்கொள்ளட்டும்... அப்போதுதான் வழிக்கு வருவார்.. கங்குலி அட்வைஸ்!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல் நாளிலேயே கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு இமாலய புக்கிங்... எவ்வளவு தெரியுமா?
முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலேயே கியா செல்டோஸ் காருக்கு இமாலய எண்ணிக்கையிலான முன்பதிவு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஎஸ்யூவி காரை இந்தியாவில் களமிறக்க உள்ளது. அடுத்த மாதம் 22ந் தேதி புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் டிசைன் இந்திய கார் பிரியர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அத்துடன், எஸ்யூவி கார் வாங்க திட்டமிட்டிருந்த இந்தியர்களையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில், கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு நேற்று முன்பதிவு துவங்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள 160 நகரங்களில் உள்ள டீலர்களிலும், கியா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவும் செல்டோஸ் காருக்கு ரூ.25,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது. இந்த நிலையில், முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 6,046 பேர் இந்த காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக கியா மோட்டார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த முன்பதிவு செய்தோரில் 1,628 பேர் ஆன்லைன் மூலமாக இந்த எஸ்யூவி காருக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நான்கில் ஒரு பங்கு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்திருக்கின்றனர்.

விலை அறிவிப்பு வெளியிடப்படும் முன்னரே கியா செல்டோஸ் காரை முண்டியடித்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த புத்தம் புதிய எஸ்யூவி கார் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்கு பல்வேறு சிறப்பம்சங்களை கூறலாம்.

புதிய கியா செல்டோஸ் காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. மேலும், அறிமுகத்தின்போது டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கிறது.

ஜிடி லைன் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் எல்இடி விளக்குகள் கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர், டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட இருக்கின்றன. 17 அங்குல க்றிஸ்ட்டல் கட் அலாய் வீல்கள் உள்ளன. பிரிமீயம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் வருகிறது. வென்டிலேட்டட் இருக்கைகள், சாய்மான வசதியுடன் பின் இருக்கைகள் முக்கிய வசதிகளாக இருக்கும்.

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 7 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெறுகின்றன. இந்த காரில் 8.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே யூனிட்டும் கொடுக்கப்படுகிறது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும்.

அத்துடன், யுவோ என்ற செயலி மூலமாக 37 விதமான கட்டுப்பாட்டு வசதிகளை பெற முடியும். இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியை பெறுவதற்கான சிம் கார்டுடன் வர இருக்கிறது. 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் பிரிமீயம் ஆடியோ சிஸ்டமும் உள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் ஃபோர்ஸ் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபளிட்டி மேனேஜ்மென்ட், 6 ஏர்பேக்குகள் என எக்கச்சக்கமான பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கும்.

புதிய கியா செல்டோஸ் கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ், மாருதி எஸ் க்ராஸ், ரெனோ கேப்ச்சர் மற்றும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். அத்துடன், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் கார்களுக்கும் போட்டியை தரும்.