Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- News
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Lifestyle
இந்தியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசி பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செல்டோஸ் காரில் நேரடி இணைய வசதிக்காக வோடஃபோனுடன் கைகோர்த்த கியா மோட்டார்ஸ்!
கியா செல்டோஸ் காரில் வோடஃபோன் ஐடியா சிம் கார்டு மூலமாக இணைய வசதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் கார் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. விற்பனையிலும் கலக்கி வருகிறது. இந்த கார் மாபெரும் வெற்றி பெற்றதற்கு பல்வேறு சிறப்பம்சங்களை அடுக்கலாம்.

டிசைன், இடவசதி, தொழில்நுட்ப வசதிகள், சிறந்த எஞ்சின் தேர்வுகள் மற்றும் சரியான விலை ஆகியவை காரணமாக கூறலாம். இதில், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியை பெற்றிருப்பதும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிம் கார்டு பொருத்தப்பட்டு நேரடி இணைய வசதியை பெறும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த இணைய வசதிக்காக வோடஃபோன் ஐடியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

கியா செல்டோஸ் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் உரிமையாளரின் ஸ்மார்ட்ஃபோனை இணைக்கும் விதத்தில் யுவோ என்ற பிரத்யேக செயலியையும் கியா வழங்குகிறது. இந்த செயலி மூலமாக 37 விதமான நவீன வசதிகளை பெற முடியும்.

கியா செல்டோஸ் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இருக்கும் இ-சிம்கார்டு மூலமாக 3ஜி மற்றும் 4ஜி இணைய வசதி, எஸ்எம்எஸ், போன் அழைப்புகளை மேற்கொள்ள இயலும். அத்துடன், கார் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, நேவிகேஷன் எனப்படும் பாதை வழிகாட்டும் வசதிகள் உள்ளன.

மேலும், ஸ்மார்ட்ஃபோன் மூலமாக கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்யவும், அணைப்பதற்கான வாய்ப்பு, குறிப்பிட்ட பகுதியை விட்டு கார் வெளியே செல்ல இயலாதவாறு கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கார் எஞ்சின் இயங்கும் வகையில் டைம் ஃபென்சிங் வசதிகள் உள்ளன.

காரின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கும், திருடு போனால் கண்டறிவதற்குமான வசதிகளும் உள்ளன. இதுதவிர்த்து, ஏசியை ரிமோட் முறையில் இயங்கும் வசதியும் உள்ளது. இந்த காரில் விபத்தில் சிக்கினால் உடனடியாக அவசர மையங்கள் மற்றும் உறவினர்களுக்கு குறுந்தகவல் மூலமாக செய்தி வழங்கும் வசதியும் குறிப்பிடத்தக்கதாக கூறலாம்.
MOST READ: பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!

புதிய கியா செல்டோஸ் காரில் 115 எச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 115 எச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 140 எச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. அனைத்து எஞ்சின் தேர்வுகளிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்ப்டுகின்றன.
MOST READ: நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

புதிய கியா செல்டோஸ் கார் ரூ.9.69 லட்ம் முதல் ரூ.16.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட பல முன்னணி மாடல்களுக்கு கடும் சந்தைப் போட்டியை தந்துள்ளது.