லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியீடு!

பந்தய களத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. படங்கள், கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியீடு!

உலகின் அதிசிறந்த சூப்பர் எஸ்யூவி மாடலாக லம்போர்கினி உரஸ் மாறி இருக்கிறது. இந்தியாவிலும் கூட விற்பனையில் அசத்தி வருகிறது. இந்த நிலையில், பந்தய களத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்களுடன் லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியீடு!

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட லம்போர்கினி உரஸ் எஸ்டி-எக்ஸ் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பந்தய களத்திற்கான மாடல் பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. பந்தய களத்தில் அதிவேகத்தில் செலுத்துவதற்கான பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புதிய உரஸ் எஸ்யூவி மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், இதுதான் உலகின் முதல் ரேஸ் எஸ்யூவி மாடலாக குறிப்பிடப்படுகிறது.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியீடு!

புதிய லம்போர்கினி உரஸ் எஸ்டி-எக்ஸ் எஸ்யூவியில் கூடுதலாக கார்பன் ஃபைபரிலான பல்வேறு பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் விசேஷ ஏர் இன்டேக்குகள் கொண்ட கார்பன் ஃபைபர் பானட் அமைப்பு, பின்புறத்தில் விங் அமைப்பு மற்றும் ரேஸ் கார்களுக்கான விசேஷ புகைப்போக்கி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியீடு!

சாதாரணமாக விற்பனையில் உள்ள லம்போர்கினி உரஸ் எஸ்யூவியைவிட புதிய லம்போர்கினி உரஸ் எஸ்டி-எக்ஸ் ரேஸ் மாடலானது 550 கிலோ வரை குறைவான எடை கொண்டது. இந்த கார் 1,650 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியீடு!

புதிய லம்போர்கினி உரஸ் எஸ்டி-எக்ஸ் எஸ்யூவியில் 4.0 லிட்டர் வி8 டர்போ எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 650 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியீடு!

ரேஸ் மாடலாக வேறுபடுத்தும் விதத்தில், விசேஷ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது. பச்சை, கருப்பு, சிவப்பு வண்ணக் கலவைகளில் ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. பம்பரில் பைரெல்லி நிறுவனத்தின் ஸ்டிக்கர்கள் இடம்பெற்றுள்ளன.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியீடு!

புதிய லம்போர்கினி உரஸ் எஸ்டி-எக்ஸ் எஸ்யூவியில் 21 அங்குல சென்டர்-லாக் அலுமினியம் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, சக்கரத்தை ஒரே நட்டில் எளிதாக கழற்றி மாட்டும் விதத்தில் சென்டர் லாக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பந்தய களத்தில் பயன்படுத்துவதற்கான விசேஷமான பைரெல்லி டயர்கள் இடம்பெற்றுள்ளன.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் ரேஸ் மாடல் வெளியீடு!

பந்தய களத்தில் விபத்தில் சிக்கினால் ஓட்டுனரை பாதுகாக்கும் வகையில், உட்புறத்தில் டியூபியூலர் ரோல்-பார், ரேஸ் இருக்கைகள் மற்றும் தீயணைப்பு சாதனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு கூடுதல் கட்டுப்பாட்டு அமைப்புகளும் இடம்பெற்றிருக்கிறது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் லம்போர்கினி சூப்பர் டிரோஃபியோ கார் பந்தயத்தில் இந்த புதிய உரஸ் எஸ்டி-எக்ஸ் பந்தய மாடல் முதல்முறையாக பந்தயத்தில் களமிறக்கப்பட உள்ளது. இது நிச்சயம் கார் பந்தய பிரியர்களுக்கு புதிய அனுபவத்தையும், பரவசத்தையும் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Lamborghini has unveiled race track oriented Urus SUV based on Urus ST-X concept that was showcased last year.
Story first published: Monday, October 28, 2019, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X