ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக செயல்படும் லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்காக, புதிய மாடல்களை களமிறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

ஸ்போர்ட்ஸ் வகை சொகுசு கார்களுக்கான வரவேற்பு நல்லவிதமாக இருப்பதையடுத்து, தனது எல்சி கூபே ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, இந்த காருக்கான முன்பதிவை அந்நிறுவனத்தின் டீலர்களில் சத்தமில்லாமல் துவங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் இந்த காருக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாக டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த கார் கூபே வகை ஸ்போர்ட்ஸ் கார். மேலும், 2+2 என்ற இருக்கை அமைப்புடன் 4 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை அளிக்கிறது.

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த காரின் முகப்பு மிகவும் தனித்துவமாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சி அளிக்கிறது. முடிச்சு போன்ற லெக்சஸ் கார்களின் தனித்துவமான க்ரில் அமைப்பு, சிறப்பான ஹெட்லைட் டிசைன், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், தாழ்ந்து இறங்கும் கூரை அமைப்பு என்று மிக வசீகரமாகவும், போட்டியாளர்களிடத்தில் இருந்து வேறுபடுத்தும் விதமாகவும் இருக்கிறது.

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விள்ககுகள், 21 அங்குல அலாய் வீல்கள் என மிக அசத்தலாக இருக்கிறது. இந்த காரில் கார்பன் ஃபைபர் கூரை அமைப்பும் வழங்கப்படுவது முக்கிய அம்சம்.

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

உட்புறத்திலும் மிக பிரிமீயமான மாடலாக இருக்கிறது. கருப்பு வண்ண இன்டீரியர் தீம், விசேஷ அலங்கார ஆக்சஸெரீகள், அல்கான்ட்ரா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசிதிகள் உள்ளன. இந்த காரில் 10.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. அமேஸான் அலெக்ஸா மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

லெக்சஸ் எல்சி காரில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் மற்றும் 3.5 லிட்டர் வி6 எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 5.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 465 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் ஹைப்ரிட் மாடலாக கிடைக்கும்.

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த மாடலில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 349 பிஎச்பி பவரையும், 348 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். 250 கிமீ வேகம் வரை செல்லும். ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

புதிய லெக்சஸ் எல்சி500எச் கார் 4,770 மிமீ நீளமும், 1,920 மிமீ அகலமும்,, 1345 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2,870 மிமீ ஆக உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 140 மிமீ. இது சிறந்த கையாளுமையை வழங்கும் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும்.

ரூ.25 லட்சம் முன்பணத்துடன் லெக்சஸ் எல்சி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

புதிய லெக்சஸ் எல்சி ஸ்போர்ட்ஸ் கார் ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி இடையிலான விலையில் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

Source: IAB

Most Read Articles
மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
According to a media report, Lexus is accepting bookings for the LC sports car India. The booking amount is set at Rs. 25 lakh.
Story first published: Saturday, August 3, 2019, 17:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X