உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

இங்கிலாந்தை சேர்ந்த லோட்டஸ் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், எதிர்கால வர்த்தகத்தை கருதி எவிஜா என்ற பெயரில் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலை உருவாக்கி இருக்கிறது.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

புகாட்டி சிரோன் பெட்ரோல் ஹைப்பர் காருக்கே சவால் விடும் வகையில், இந்த எலெக்ட்ரிக் கார் அதிசக்திவாய்ந்த மாடலாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதாவது, 2,000 பிஎஸ் (1,972 பிஎச்பி) பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அதிசக்திவாய்ந்த கார் மாடலாகவும் இது கருதப்படுகிறது.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

லோட்டஸ் பெட்ரோல் ஸ்போர்ட்ஸ் கார்களின் பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களை அதிகம் காண முடிகிறது. சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தை வழங்கும் வகையில், லீமான்ஸ் ரேஸ் கார்களின் டிசைன் தாத்பரியங்களும் தெரிகின்றன. மேலும், மிக குறைவான காற்று இழுவிசையை இந்த கார் பெற்றிருக்கும் என்பதால், செயல்திறனில் மிரட்டலாக இருக்கும்.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

இந்த கார் வெறும் 3 வினாடிகளில் 0 - 96 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பதுடன் மணிக்கு 321 கிமீ வேகம் வரை தொடும் வல்லமையை இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கிறது.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

லோட்டஸ் எவிஜா ஹைப்பர் காரில் ஃபார்முலா ஒன் பந்தய கார்களில் இருப்பதை பிரதிபலிக்கும் வகையிலான ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அல்காண்ட்ரா லெதர் உறையுடன் இந்த ஸ்டீயரிங் வீல் பிடிப்பதற்கு உன்னத உணர்வையும், அதிக பிடிமானத்தையும் வழங்கும். பல்வேறு கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் ஸ்டீயரிங் வீலில் இடம்பெற்றுள்ளது.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மேலும், ரேஞ்ச், சிட்டி, டூர், ஸ்போர்ட் மற்றும் டிராக் என பல்வேறு விதமான டிரைவிங் மோடுகளும் உள்ளன. இதனை ஸ்டீயரிங் வீல் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக பல்வேறு தகவல்களை ஓட்டுனர் பெற முடியும்.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

இந்த காரின் மிக முக்கிய விஷயம், பேட்டரி, மின்மோட்டார் மற்றும் சார்ஜர் உள்ளிட்டவைதான். ஆம், இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரில் 350kW சார்ஜர் கொடுக்கப்படுகிறது. தற்போதைக்கு உலகின் திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் கார் சார்ஜராக தெரிவிக்கப்படுகிறது.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

இந்த சார்ஜர் மூலமாக வெறும் 12 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியில் சார்ஜ் ஏற்றிவிட முடியும். 18 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியுமாம். 800kW சார்ஜரும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சார்ஜர் மூலமாக வெறும் 9 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் 1,680 கிலோ எடை கொண்டது. இதுவரை தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்களில் மிகவும் எடை குறைந்த மாடலாகவும் லோட்டஸ் எவிஜா இருக்கும்.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

மஹிந்திரா கீழ் செயல்படும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் காருக்கு இது போட்டியாக இருக்கும். பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா கார் 1,900 பிஎஸ் பவரை அளிக்கும் திறன் வாய்ந்தது. ஆனால், இந்த கார் 2,000 பிஎஸ் பவரை வாரி வழங்கும் திறன் வாய்ந்த மின்சார கார் மாடலாக வர இருக்கிறது.

உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்!

கடந்த 2017ம் ஆண்டு லோட்டஸ் நிறுவனத்தை சீனாவை சேர்ந்த கீலி வாகன தயாரிப்பு நிறுவனம் கையகப்படுத்தியது. அதிக அளவிலான முதலீட்டை அளித்து வருகிறது. சொகுசு வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற வால்வோ நிறுவனமும் கீலி நிறுவனத்தின் கீழ் தான் செயல்பட்டு வருவது குறிப்பிடத்ததக்கது.

Most Read Articles
மேலும்... #லோட்டஸ் #lotus
English summary
British sports car maker, Lotus has unveiled world's most powerful electric hypercar, named as Evija.
Story first published: Wednesday, July 17, 2019, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X