மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள பிஎஸ்6 பலேரோ பிக்-அப் ட்ரக்கின் சிஎன்ஜி வேரியண்ட் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ட்ரக்கின் பின்புறத்தில் தற்காலிக நம்பர் ப்ளேட் மற்றும் சிஎன்ஜி என்கிற வேரியண்ட் குறியீடும் கொடுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி (Compressed Natural Gas) என்பது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்தும் செயல்முறையாகும்.

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

இந்த சிஎன்ஜி வேரியண்ட் கார்கள் அதிக மைலேஜ் கொடுப்பவையாகும், சுற்றுச்சூழலை குறைவாக மாசு ஏற்படுத்துபவையாகும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் சிஎன்ஜி என்ஜினிற்கு மாறி வருகின்றனர். மற்ற என்ஜின்களும் (குறிப்பாக பெட்ரோல் என்ஜின்) சிஎன்ஜிக்கு மாற்றப்பட்டு வருகின்றன. குறைந்த விலை கொண்ட கார்கள் சிஎன்ஜி வேரியண்ட்டை கொண்டிருப்பதற்கும் இதுதான் காரணம்.

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்களில் இருக்கும் குறை என்னவென்றால் அவற்றின் திறன் சிறிது குறைவாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிறிய அளவிலான கார்களில் சிஎன்ஜி எரிபொருள் டேங்குகளால் பின்புற லக்கேஜ் பிரிவு பொருத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக்கிற்கு சிஎன்ஜி வேரியண்ட்டால் இந்த பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை.

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா பலேரோ பிக்-அப் மாடலை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த ட்ரக் இந்நாள் வரை இந்திய சந்தையில் இதன் பிரிவில் சிறந்த முறையில் விற்பனையாகும் மாடலாக உள்ளது. கிராமப்புற மக்களிடம் மட்டுமில்லாமல், கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகவும் இந்த பலேரோ பிக்-அப் ட்ரக் விளங்குகிறது.

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

விற்பனையில் 15 லட்சம் என்கிற மைல்கல்லை இந்த ட்ரக் சில மாதங்களுக்கு அடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கஸ்டமைஸ் செய்யும் வகையில் வடிவமைப்பை பெற்றுள்ள இந்த ட்ரக்கின் சில மாடல்களில் பின்புற-சக்கர-ட்ரைவ் மற்றும் நான்கு-சக்கர-ட்ரைவ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் மூன்று மாடல்களில் விற்பனையாகி வருகிறது. அவையாவன, பிக்-அப், மேக்ஸி ட்ரக் மற்றும் கேம்பர் ஆகும். இவை மூன்றும் தொழிற்சாலை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, வேளாண்மை என வெவேறு விதமான பயன்பாட்டிற்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன.

Most Read:புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு.. இதற்காகதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

இதில் பிக்-அப் மாடல், கூடுதல் வலிமை அல்லது கூடுதல் நீளம் என்கிற இரு ஃபார்மட் தேர்வுகளை பெற்றுள்ளது. அதேபோல் இவை இரண்டும் ஃப்ளாட்பெட் அல்லது சிபிசி ஃபார்மட்ஸிலும் கிடைக்கும். பலேரோ பிக்-அப் கேம்பர் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read:இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

பலேரோவின் இந்த மூன்று மாடல்களும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மாற்றப்பட்டு வருகின்றன. தற்சமயம் கூடுதல் வலிமை ஃபார்மட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள 2.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் அமைப்பை கொண்ட பிஎஸ்4 என்ஜின் அதிகப்பட்சமாக 63 பிஎச்பி பவரையும் 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

Most Read:மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...

கூடுதல் நீளம் ஃபார்மட், அதே என்ஜின் அமைப்புடன் 70 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. பிஎஸ்6 தரத்திற்கு இவற்றின் என்ஜின்கள் மாற்றப்பட்டால் இந்த வெளியிடும் ஆற்றல் அளவுகளில் சிறிய வேறுபாட்டை எதிர்பார்க்கலாம். மஹிந்திரா பலேரோ பிக்-அப் பிஎஸ்6 மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.7 லட்சத்தில் இருந்து விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Rushlane

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Bolero Pick up BS6 CNG Variant Spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X