நாட்டின் முதல் எலக்ட்ரிக் காருக்கு நிகழவிருக்கும் சோகம்: வேதனையின் உச்சத்தில் மஹிந்திரா நிறுவனம்!

நாட்டின் முதல் எலக்ட்ரிக் காரான இ2ஓ காரின் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் முடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் முதல் எலக்ட்ரிக் காருக்கு நிகழவிருக்கும் சோகம்: வேதனையின் உச்சத்தில் மஹிந்திரா நிறுவனம்!

சுற்றுப்புறச்சூழலின் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்னம் உள்ளிட்டவற்றில் பெரும் பங்கினை அளிக்கும் வகையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், இ2ஓ என்ற ஜீரோ எமிஸ்ஸன் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுவே நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையைக் கொண்டு இந்தியச் சாலைகளுக்கு அறிமுகமாகியது.

நாட்டின் முதல் எலக்ட்ரிக் காருக்கு நிகழவிருக்கும் சோகம்: வேதனையின் உச்சத்தில் மஹிந்திரா நிறுவனம்!

இந்த காரின் உற்பத்தியைத்தான் மஹிந்திரா நிறுவனம் தற்போது நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ஆங்கில இணையதளமான காடிவாடி வெளியிட்டுள்ளது. இந்த இ2ஓ சிறிய ரக எலக்ட்ரிக் காரின் உற்பத்தியை, மஹிந்திரா நிறுவனம் கடைசியாக மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செய்ததாக கூறப்படுகிறது.

நாட்டின் முதல் எலக்ட்ரிக் காருக்கு நிகழவிருக்கும் சோகம்: வேதனையின் உச்சத்தில் மஹிந்திரா நிறுவனம்!

ஆகையால், எஞ்சியுள்ள இ2ஓ கார்களை நேப்பாளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் விற்பனைச் செய்ய மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், இ2ஓ எலக்ட்ரிக் காருக்கு மாற்றாக கேயூவி100 எனப்படும் மைக்ரோ ரக எஸ்யூவி எலக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

நாட்டின் முதல் எலக்ட்ரிக் காருக்கு நிகழவிருக்கும் சோகம்: வேதனையின் உச்சத்தில் மஹிந்திரா நிறுவனம்!

மஹிந்திரா நிறவனத்தின் இந்த திடீர் முடிவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், முக்கியமாக அரசாங்கம் அறிவித்துள்ள எலக்ட்ரிக் கார்களுக்கான புதிய விதிமுறை மற்றும் வரம்புகளே காரணமாக இருக்கின்றன.

நாட்டின் முதல் எலக்ட்ரிக் காருக்கு நிகழவிருக்கும் சோகம்: வேதனையின் உச்சத்தில் மஹிந்திரா நிறுவனம்!

இ2ஓ எலக்ட்ரிக் காரை ரெவா பிளாட்பாரத்தில் வைத்து மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ளது. உள்நாட்டிலேயே இது தயாரிக்கப்பட்டதாலும், மலிவான விலையில் அதிக ரேஞ்சைக் கொடுக்கும் காராக இருந்ததாலும், இந்த காருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

நாட்டின் முதல் எலக்ட்ரிக் காருக்கு நிகழவிருக்கும் சோகம்: வேதனையின் உச்சத்தில் மஹிந்திரா நிறுவனம்!

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த இ2ஓ எலக்ட்ரிக் காரை பி2, பி4 மற்றும் பி6 ஆகிய மூன்று வேரியண்டில் அறிமுகம் செய்திருந்தது. இதில், பி2 காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ வரை பயணிக்கலாம். அதேபோன்று பி4 மற்றும் பி6 கார்களை முழுமையாக சார்ஜ் செய்தால் 110கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

நாட்டின் முதல் எலக்ட்ரிக் காருக்கு நிகழவிருக்கும் சோகம்: வேதனையின் உச்சத்தில் மஹிந்திரா நிறுவனம்!

இந்த மூன்று வேரியண்ட்களிலும் 25.4 குதிரைத்திறனை வழங்கும் மின் மோட்டாரைத்தான் மஹிந்திரா நிறுவனம் இணைத்துள்ளது. இது, 3,500 ஆர்பிஎம்-இல் இந்த குதிரைத்திறனை வெளிப்படுத்தும். அதேபோன்று, 70 என்எம் டார்க்கை 1,050 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இத்துடன் இந்த காரில் தொழில்நுட்ப வசதிகளாக ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ஸ்மார்ட்போன் ஆப் கன்னெக்கடிவிட்டி, ப்ரீ கூலிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Discontinued India’s First Electric Car e2o. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X