ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா...? - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை!

மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான இ2ஓ, ரூ.50 ஆயிரம் செலவில் பல ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடந்துச் சென்று சாதனைப்படைத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா...? - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை...!

எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்க மின் வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாறுவது தற்போது கட்டாயமான சூழலாக உருவாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு, மின் வாகனங்களுக்கு சிறப்பு மானியம் வழங்குதல் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா...? - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை...!

மின்வாகனங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவிதத்திலும் கேடு விளைப்பதில்லை. மேலும், மின் வாகனங்கள் எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் குறைவான செலவீணத்தையே அளிக்கும் தன்மைக் கொண்டவை. இதனை நிரூபிக்கும் விதமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஓர் நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா...? - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை...!

இதற்கு முன்பாகவும் இதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வைபி வாக்கர் என்பவர் தான் இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர். சுற்றுச்சூழல்மீது ஆர்வம் கொண்ட இவர், மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரிக் காரில் 95,000 கிமீ பயணித்துள்ளார். அவ்வாறு நெதர்லாந்தில் தொடங்கி, துருக்கி, ஈரான், இந்தியா, மியான்மர் மற்றும் மலேசியா உட்பட 33 நாடுகளைச் சுற்றி வலம் வந்துள்ளார்.

READ MORE: என்ன...! இதுக்கெல்லாம அவார்ட் தருவாங்க...? ஹைதராபாத் போலீஸின் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லையா...!

ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா...? - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை...!

வைபி வாக்கர், ஒவ்வொரு நாட்டையும் சுற்றிவர அவரது எலக்ட்ரிக் காரை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். அவர் 33 நாடுகளிலும் 95,000 கிமீ தூரம் வரை பயணித்துள்ளார். அவ்வாறு, எலக்ட்ரிக் காரில் பயணிக்க இதுவரை ரூ. 20 ஆயிரம் மட்டுமே, காரினைச் சார்ஜ் செய்ய செலவு செய்துள்ளார்.

ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா...? - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை...!

இந்த பயணத்தை அவர் மேற்கொள்ள, மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமின்றி, அதனால் ஏற்படும் மிகவும் குறைவான செலவீணத்தை மக்கள் அறியச் செய்யும் விதமாக நிகழ்த்தியுள்ளார்.

ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா...? - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை...!

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் வசித்து வரும் கே.எஸ். சுரேஷ் என்பவர், அவரது மஹிந்திரா இ2ஓ கார் மூலம் ஒரு லட்சம் கிலோ மீட்டர் சுற்றி வந்துள்ளார். இதற்கு அவர், ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். இந்த செலவானது, எலக்ட்ரிக் காரினை பராமரிப்பது மற்றும் சார்ஜ் செய்வதற்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த, வீடியோவை பிளக்இன்இந்தியா என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா...? - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை...!

சுரேஷ், புதுடெல்லயில் வசித்துக் கொண்டிருந்தபோது, மஹிந்திராவின் இந்த இ2ஓ எலக்ட்ரிக் காரினை ஐந்து வருடங்களுக்கு முன்பு ரூ. 6 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த வகையில், கடந்த ஐந்து வருடங்களாக காரை பராமரித்தது மற்றும் சார்ஜ் செய்தது என இதுவரை ரூ.85 ஆயிரம் வரை அவர் செலவு செய்துள்ளார்.

READ MORE: நாம் இருவர் நமக்கு இருவர் - உச்சநீதிமன்றத்தின் புதிய திட்டத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...!

இதில், ரூ. 50 ஆயிரம் காரை சார்ஜ் செய்வதற்கும், ரூ.35 ஆயிரம் காரை பராமரிக்கவும் செலவிட்டுள்ளார். சுரேஷ் செய்திருக்கும் இந்த செலவானது, மற்ற எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் ஆகும்.

Most Read Articles

English summary
Mahindra E2O Electric Car Owner Clocks 1 Lakh KM, Spends Rs.85,000. Read In Tamil.
Story first published: Thursday, April 18, 2019, 16:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X