முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

மாதச் சந்தா திட்டத்தில் புதிய மஹிந்திரா கார்களை பெற்று பயன்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா காரை வாங்குவதற்கான இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், புதிய திட்டத்தின் மூலமாக கார்களை விற்பனை செய்யும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், எஸ்யூவி தயாரிப்பில் பிரபலமான மஹிந்திரா கார் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

ஏற்கனவே குத்தகை அடிப்படையில் கார்களை வாடகைக்கு எடுத்தும் ஓட்டும் வாய்ப்பை அறிமுகம் செய்த அந்த நிறுவனம், தற்போது மாதச் சந்தா திட்டத்தின் கீழ் புத்தம் புதிய கார்களை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்படுத்தும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500, எக்ஸ்யூவி300, ஸ்கார்ப்பியோ, டியூவி300, மராஸ்ஸோ, அல்டுராஸ் ஜி4 மற்றும் கேயூவி100 நெக்ஸ்ட் ஆகிய கார்களை இந்த புதிய மாதச் சந்தா திட்டத்தின் கீழ் வாங்கி பயன்படுத்த முடியும்.

முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

ரெவ் நிறுவனத்தின் கூட்டணியுடன் இந்த மாதச் சந்தா திட்டத்தை மஹிந்திரா செயல்படுத்த உள்ளது. வாடிக்கையாளர் விரும்பும் புதிய மஹிந்திரா கார் மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்குள் டெலிவிரி கொடுக்கப்படும்.

முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

முன்பணம், இன்ஸ்யூரன்ஸ், பராமரிப்பு செலவு உள்ளிட்ட எந்த பிரச்னையும் கிடையாது. ஒவ்வொரு கார் மாடலுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதச் சந்தாவை மட்டும் கட்டினால் போதுமானது. ஆனால், இதற்காக காப்புத் தொகையும், முதல் மாதச் சந்தா தொகையையும் கார் டெலிவிரி பெறும்போது செலுத்த வேண்டும்.

முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

புத்தம் புதிய கார் வேண்டுமெனில், குறைந்தது ஓர் ஆண்டுக்கு காரை பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை மாதச் சந்தா திட்டத்தில் புதிய மஹிந்திரா காரை வாங்கி பயன்படுத்தலாம்.

Most Read: 2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

முதல்கட்டமாக டெல்லி உள்ளடக்கிய வடமத்திய பிராந்திய பகுதி, மும்பை, புனே, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, சண்டிகர் மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த புதிய மாதச் சந்தா திட்டத்தை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் விரைவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Most Read: கூடுதல் சிறப்பம்சங்களுடன் டிவிஎஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் அறிமுகம்!

முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

இந்த புதிய மாதச் சந்தா திட்டத்தின் கீழ் புத்தம் புதிய மஹிந்திரா காரை வாங்க விரும்புவோர் தங்களது சுய விபரங்கள், வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை அளிக்க வேண்டும். தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்தில் புதிய மஹிந்திரா கார் டெலிவிரி செய்யப்படும்.

Most Read: ஓலா, உபரால் வாகன விற்பனை சரிகிறதாம்... தேச நலனுக்காக பிரபல இயக்குனர் செய்த அதிரடி... செம கலாய்

முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்!

மஹிந்திரா கார் மாடலை பொறுத்து ரூ.19,720 முதல் மாதச் சந்தா திட்டம் துவங்குகிறது. குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் வாடிக்கையாளர் காரை திரும்ப ஒப்படைக்கும்போது காப்புத் தொகை திரும்ப அளிக்கப்படும்.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

வாடிக்கையாளர்களிடம் இருந்து முன்பணம் பெறாமல், அவர்களுக்கு மாத சந்தா திட்டத்தில் வாகனங்களை வழங்கும் திட்டங்கள் தற்போது இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. இந்த வரிசையில் முன்பணம் இல்லாமல், வெறும் ரூ.2,999 மாத தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

முதல்முறையாக சுலப மாதத் தவணை திட்டத்தில் புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்கள், மாதத் தவணை திட்டங்கள் மற்றும் இதர விபரங்களைதான் இனி பார்க்க போகிறோம்.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவு பைக்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், நடிகை அசின் கணவருமான ராகுல் ஷர்மாவின் ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாக ஆர்வி400 பைக் வந்துள்ளது. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் மாடலாக ரிவோல்ட் ஆர்வி400 பைக் நிறுவனத்தால் தெரிவிக்கப்படுகிறது.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

இரண்டு மாடல்கள்

ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய இரண்டு மாடல்களில் புதிய ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், ஆர்வி400 மாடல் பேஸ் மற்றும் பிரிமீயம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஆர்வி300 மாடல் சற்று குறைவான செயல்திறன் கொண்டதாகவும், ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் அதிக செயல்திறன் மிக்கதாகவும் வந்துள்ளன.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

டிசைன்

புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் டிசைன் மிக துள்ளலாகவும், இளைஞர்களை கவரும் நேக்கட் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் உள்ளது. குறிப்பாக, இதன் ஹெட்லைட் உள்ளிட்ட பாகங்கள் கேடிஎம் ட்யூக் மாடல்களை நினைவூட்டுகிறது.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

முக்கிய அம்சங்கள்

இந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றுள்ளது. 17 அங்குல அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

செயல்திறன்

புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் 2.7kW பேட்டரியும், 3,000 வாட் மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். சிட்டி, ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. இந்த பைக் மணிக்கு 65 கிமீ வேகம் வரை பயணிக்கும் திறன் பெற்றதாக இருக்கிறது.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

பேட்டரி திறன்

இந்த மின்சார பைக்கின் மின்கலத்தில் முழுமையாக மின்சாரத்தை நிரப்பினால், 156 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று அராய் அமைப்பு சான்று அளித்துள்ளது. சாதாரண 15A சாதாரண சார்ஜர் மூலமாக, மின்கலத்தில் மின்சாரத்தை முழுமையாக நிரப்புவதற்கு 4 மணிநேரம் பிடிக்கும்.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

பேட்டரியை கழற்றி மாட்டலாம்

ஓட்டுதல் முறை மற்றும் தட்பவெப்ப நிலைகளால், இந்த பயண தூரம் என்பது, நடைமுறையில் சற்றே குறைவாக இருக்கலாம். இந்த பைக் 80 முதல் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் பேட்டரியை கழற்றி மாட்டும் வசதியும் இருக்கிறது. சார்ஜ் தீர்ந்து போனால், சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியும். அவசரத்திற்காக போர்ட்டபிள் சார்ஜரும் கொடுக்கப்படுகிறது. இதன்மூலமாக, ஓரளவு பேட்டரியை சார்ஜ் செய்து தொடர்ந்து பயணிக்க முடியும்.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

எல்இடி ஹெட்லைட்

இந்த பைக்கில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. புஷ் பட்டன் ஸ்டார்ட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 4ஜி எல்டிஇ சிம் கார்டு இணைக்கப்பட்டு பல்வேறு வசதிகளை நேரடியாக பெறும் வகையில் வந்துள்ளது.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

விசேஷ மொபைல் ஆப்

விசேஷமான ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் அப்ளிகேஷன் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக பைக்கின் இருப்பிடத்தை கண்டறியும் வசதி, சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை ஆர்டர் செய்து டோர் டெலிவிரி பெறும் வசதி, பைக் குறிப்பிட்ட எல்லையை விட்டு வெளியேற முடியாத வகையில் கட்டுப்படுததும் ஜியோ ஃபென்சிங் வசதி, நேவிகேஷன் வசதிகளை பெற முடியும்.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

சைலென்சர் ஸ்பீக்கர் சிஸ்டம்

இந்த பைக்கில் ஸ்பீக்கர் சிஸ்டம் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைலென்சர் சப்தத்தை செயற்கையாக ஒலி எழுப்பும் வகையில் இது செயல்படும். மேலும், ஓட்டுபவர் விரும்பும் வகையில் 4 விதமாக சைலென்சர் சப்தத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

வண்ணத் தேர்வுகள்

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் இரண்டு விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ரெபல் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

விலை விபரம்

புதிய ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் புதுமையான முறையில் மாதத் தவணைத் திட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆர்வி300 பைக்கிற்கு ரூ.2,999 மாதத் தவணையிலும், ஆர்வி400 பேஸ் மாடலுக்கு ரூ.3,499 மாதத் தவணையும், பிரிமீயம் மாடலுக்கு ரூ.3,999 மாதத் தவணையிலும், 37 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அளவுடன் வந்துள்ளன. அதாவது, முன்பணம் இல்லாமல், இலவச பதிவு ஆகியவற்றுடன் வந்துள்ளது.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

விற்பனை திட்டம்

முதல்கட்டமாக டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்தக்கட்டமாக, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

அட்டகாசமான வாரண்டி

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. பேட்டரிக்கு வரம்பில்லா கால அளவுடன் வாரண்டியும், 3 ஆண்டுகளில் ஒரு ஜதை டயர்களை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு 10,000 கிமீ தூரத்திற்கு ஒரு முறை பராமரிப்பு இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has introduced the subscription servcie in Delhi-NCR, Mumbai, Pune, Bangalore, Hyderabad, Kolkata, Chandigarh and Ahmedabad in the first phase.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X