மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்டுகளை பொறுத்து விலை ரூ.20,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பேஸ் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.8.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை முதல் டபிள்யூ-8 பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.11.84 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாரத்திலேயே டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்படும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்புத்தும் திறன் கொண்டது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரின் டீசல் மாடல் தொடர்ந்து பிஎஸ்-4 எஞ்சினுடன் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த டீசல் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பிஎஸ்-6 எஞ்சினுடன் எக்ஸ்யூவி300 கார் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவுத் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில்," விரைவில் புதிய மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், மிக குறுகிய காலத்தில் அதிக சவால்களை எதிர்கொண்டு பிஎஸ்-6 தரத்திற்கு இணையான எக்ஸ்யூவி300 காரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

எங்களது சப்ளையர்களின் ஒத்துழைப்புடன் விரைவில் அனைத்து மாடல்களையும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி அறிமுகம் செய்ய இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

சாங்யாங் டிவோலி அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் பிரிமீயம் தேர்வாக அமைந்துள்ளது. மேலும், அதிசெயல்திறன் மிக்க இதன் எஞ்சின் தேர்வுகளும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு மத்தியில் பிரிமீயம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து தனி மார்க்கெட்டை பெற்றிருக்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார். பிஎஸ்-6 மாடல் மூலமாக தனது இடத்தை வலுவாக்கிக் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 3, 2019, 14:50 [IST]
English summary
Mahindra has launched XUV300 with a BS6 compliant petrol engine and deliveries will commence this week itself.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+