ஃபோர்டு எஸ்யூவியின் அடிப்படையில் உருவாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி பற்றி முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு எஸ்யூவியின் அடிப்படையில் உருவாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 அடிப்படையில் புதிய 7 சீட்டர் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுக்கு இடையிலான ரகத்தில் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

ஃபோர்டு எஸ்யூவியின் அடிப்படையில் உருவாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி!

மஹிந்திரா எஸ்-204 என்ற பெயரிலான இந்த புதிய எஸ்யூவி மாடலானது, ஃபோர்டு நிறுவனத்தின் பி-745 என்ற கட்டமைப்புக் கொள்கையின் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஃபோர்டு எஸ்யூவியின் அடிப்படையில் உருவாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவியானது 4.3 மீட்டர் நீளத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதாவது, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியான ரகத்தில் 7 சீட்டர் மாடலாக இருக்கும்.

ஃபோர்டு எஸ்யூவியின் அடிப்படையில் உருவாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி!

இந்த கார் எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனாக இருக்கும். எனவே, டிசைன் கிட்டத்தட்ட எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அம்சங்களை ஒத்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேநேரத்தில், பக்கவாட்டு பகுதி மற்றும் பின்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

ஃபோர்டு எஸ்யூவியின் அடிப்படையில் உருவாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி!

மஹிந்திரா நிறுவனம் மோனோகாக் சேஸீயின் அடிப்படையில் கார்களை ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் வைத்திருக்கிறது. ஆனால், இந்த புதிய எஸ்யூவி வேறுபட்ட கட்டமைப்பு கொள்கையில் உருவாக்கப்பட இருக்கிறது.

ஃபோர்டு எஸ்யூவியின் அடிப்படையில் உருவாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி!

மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த காரில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதே கார் ஃபோர்டு பிராண்டிலும் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதாவது, இரு பிராண்டுகளிலும் வெவ்வேறு பெயர்களில் செல்லும்.

ஃபோர்டு எஸ்யூவியின் அடிப்படையில் உருவாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி!

மஹிந்திரா மற்றும் ஃபோர்டு ஆகிய இரண்டு பிராண்டுகளிலும் செல்லும் என்பதால், முதலீட்டு செலவு கணிசமாக குறையும். இதனால், குறைவான முதலீட்டில் குறிப்பிடத்தக்க லாபத்தை பெற முடியும் என்று இரு நிறுவனங்களும் கருதுகின்றன.

ஃபோர்டு எஸ்யூவியின் அடிப்படையில் உருவாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி!

ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர், டாடா க்ராவிட்டாஸ் என பல 7 சீட்டர் எஸ்யூவி மாடல்கள் நிலைநிறுத்தப்படும் ரகத்திலேயே இந்த புதிய மாடலும் வர இருக்கிறது. ஆனால், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட விலை குறைவாக இருக்கும் என்பதே, இந்த கார் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

Source: Autocarindia

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to report, The All New Mahindra 7 Seater SUV (codenamed: S204) likely to spawn on from Ford's new mid size SUV platform.
Story first published: Monday, December 2, 2019, 17:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X