2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்... மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது.

2020 மஹிந்திரா ஸ்கார்பியோ உட்புற காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விபரங்களை இந்த செய்தியில் காண்போம்.

2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்... மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது...

மஹிந்திரா நிறுவனம் தற்சமயம் ஸ்கார்பியோ, தார் மற்றும் எக்ஸ்யூவி500 கார்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதில் தார் மற்றும் ஸ்கார்பியோ இரண்டாம் தலைமுறை கார்கள் அடுத்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ளதால் சோதனை ஓட்டத்தில் தீவிரமாக ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன.

2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்... மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது...

அந்த வகையில் தற்போது முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் ஸ்கார்பியோ கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தாலும் காரின் புதிய பக்கவாட்டு டிசைன் போன்ற இந்த புதிய காரில் கொடுக்கப்பட்டுள்ள சில அப்டேட்கள் தெளிவாக தெரிய வருகின்றன.

தற்சமயம் விற்பனையாகி வருகின்ற மாடலை விட அதிக பரிமாண அளவுகளை கொண்டுள்ள இந்த 2020 ஸ்கார்பியோ காரில் உட்புறமும் அதிக பரப்பை கொண்டுள்ளது போல் தெரிகிறது. பக்கவாட்டு டிசைனில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருந்தாலும் பெரிய அளவிலான மாற்றம் போல் தெரியவில்லை.

2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்... மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது...

முன்புறத்தில் ஸ்போர்ட்டியான ஹெட்லைட்ஸ், புதிய வடிவில் க்ரில், ஃபாக் விளக்குடன் பொருத்தப்பட்டுள்ள புதிய பம்பர் போன்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பின்புறத்தில் கவனிக்கத்தக்கக்கூடிய புதிய டெயில் லைட்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் எதுவும் இந்த சோதனை ஓட்ட காரில் சரியாக தெரிய வரவில்லை.

2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்... மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது...

உட்புறத்தில் பெரிய தொடுத்திரையுடன் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கக்கூடிய இன்போடெயின்மெண்ட் அமைப்பு உள்ளது. கேபினின் நிறம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்களின் தரமும் சிறப்பாக உள்ளது போல் தெரிகிறது.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்... மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது...

இவற்றுடன் 2020 ஸ்கார்பியோவில் பல பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிறிது அதிகளவிலான நவீன தொழிற்நுட்பங்களை இந்த காரில் எதிர்பார்க்கலாம். தற்போதைய ஸ்கார்பியோ கார் 2.2 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் என்கிற இரு டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனையாகி வருகிறது.

Most Read:வழியை அடைத்து நின்றதால் அதிரடி... மாருதி டிசையர் காரை அசால்டாக கையில் தூக்கி ஓரமாக வைத்த டிரைவர்...

2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்... மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது...

இந்த புதிய ஸ்கார்பியோ காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் பொருத்தப்படவுள்ளது. இதுமட்டுமில்லாமல் மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் பெட்ரோல் பிஎஸ்6 என்ஜினையும் கூடுதலாக வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra Scorpio Spied Closely On Test Again In India
Story first published: Friday, November 22, 2019, 20:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X