பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

தொடர் மந்த நிலை காரணமாக மஹிந்திரா நிறுவனம் அதிர்ச்சிகரமான ஓர் முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

சமீப காலமாக இந்திய மோட்டார் வாகன சந்தை மிக மோசமான கஷ்ட காலத்தைச் சந்தித்து வருகின்றது. இதற்கு, அண்மைக் காலங்களாக நிலவி வரும் விற்பனை வீழ்ச்சியே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால், உள்நாட்டில் இயங்கும் பெருவாரியான வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் உற்பத்தியை கணிசமாக குறைத்து வருகின்றது.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

அத்துடன், தற்காலிகமாக பணியாற்றி வந்த ஊழியர்களையும் ஒரு சில நிறுவனங்கள் வெளியேவேற்றி வருகின்றது. மேலும், ஆட்டோ துறைச் சார்ந்து பணியாற்றும் பல லட்சக்கணக்கானோர் வெளியேற்றப்படும் சூழலில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் வாகன சந்தையாக என்ற பெயரைப் பெற்று வந்த இந்தியா, தற்போது மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதில் நாட்டின் ஜாம்பவான்களான டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களும் தப்பிக்கவில்லை. அந்தவகையில், கடந்த மாதத்தில் மட்டும், டாடா 31 சதவீதத்தையும், மஹிந்திரா 16 சதவீதம் விற்பனை சரிவையும் சந்தித்துள்ளது.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

அதேபோன்று, ஹோண்டா நிறுவனம் 48 சதவீதமும், ஹூண்டாய் நிறுவனம் 10 சதவீதம் விற்பனை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

இதனைச் சமாளிக்கும் விதமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

இதனடிப்படியைில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், தனது வாகன உற்பத்தி ஆலைகளை 8 முதல் 14 நாட்கள் வரை தற்காலிமாக மூடவிருப்பதாக அறிவித்துள்ளது. இதனால், இந்த நாட்களில் வாகன உற்பத்தி அனைத்தும் தடை செய்யப்படும்.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விற்பனை விகிதத்திற்கு ஏற்பவாறு உற்பத்தியை மாற்றியமைக்கும் விதமாக 8 முதல் 14 நாட்கள் வரை மஹிந்திரா உற்பத்தி ஆலையில் வாகன தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இந்த காலகட்டத்தில் மஹிந்திரா வாகனங்களின் விற்பனைகுறித்த ஆய்வு நடைபெறும். இதன் முடிவை வைத்து வரும் காலங்களில் உற்பத்தி நடைபெற உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

தற்போது இந்திய வாகன சந்தை இந்த அளவிற்கு மோசமான மந்த நிலை மற்றும் விற்பனை வீழ்ச்சியைச் சந்திக்க பண மதிப்பிழப்பு மற்றும் அதிக ஜிஎஸ்டி வரியே முக்கிய காரணமாக இருப்பதாக வாகன துறைச் சார்த வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

மேலும், இந்த மந்த நிலையை சீர் செய்ய எரிபொருள் வாகனங்கள் தற்போது விதிக்கப்பட்டு வரும் அதிக வரியை கணிசமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

அதேசமயம், எரிபொருள் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும், அவற்றின்மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக அதிரடியாக மத்திய அரசு குறைத்தது. இதேபோன்றொரு நடவடிக்கையை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது எதிர்பார்க்கின்றது.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

இதுகுறித்த விவாதத்தை ஆட்டோ துறை பிரதிநிதிகள் ஏற்கனவே மத்திய நிதியமைச்சரை சந்தித்து முன்வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

சூழ்நிலை இவ்வாறு இருக்க மஹிந்திரா நிறுவனம், அண்மையில் மின்வாகன சந்தையில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

அந்த நிறுவனம், இந்தியாவில் தொடர்ச்சியாக அட்டகாசமான மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க இருப்பதாக அறிவித்தது.

அந்தவகையில், மஹிந்திரா இ-கேயூவி100 எலக்ட்ரிக் காரா நடப்பாண்டின் இறுதிக்குள்ளாகவும், இ-எக்யூவி300 மாடலை 2020ம் ஆண்டிற்குள்ளும் களமிறக்க உள்ளது. தொடர்ந்து, மூன்றாவது மாடலாக மஹிந்திரா பேட்ஜில், ஃபோர்டு நிறுவனத்தின் அஸ்பயர்ட் கார் எலெக்ட்ரிக் மாடலாக 2021ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பரிதாப நிலையில் இந்திய வாகனத்துறை: அதிர்ச்சியான முடிவெடுத்த மஹிந்திரா!!!

இதனை அந்நிறுவனத்தின் இயக்குநர் பவன் கோயன்கா, அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த மூன்று மின் வாகனங்களும், ஏற்கனவே களத்தில் உள்ள இ-வெரிட்டோ எலெக்ட்ரிக் காருடன் இணைந்து சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Plan To Suspend Production For 8-14 Days. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X