அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்...

புதிய மாசு உமிழ்வுக்கு ஏற்ற பிஎஸ்6 தரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் இந்த கார் கூடுதல் டிசைன் மாற்றங்களுடன் தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்...

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் இந்த காரின் முன்புற க்ரில் பகுதியானது சில பேனல்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டது போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளது. இது மட்டுமின்றி மெல்லியதான ப்ரோஜெக்டர் ஹெட்லைட்ஸ், புதிய ஃபாக் விளக்கு, அகலமான ஏர் இண்டேக் மற்றும் அப்டேட்டான மேற்க்கூரை போன்றவற்றையும் கொண்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்...

அதேபோல் மேற்க்கூரையை தாங்கும் நீளமான பில்லர்கள் மற்றும் விண்ட்ஷீல்டு போன்றவற்றை இந்த புதிய கார் முந்தைய மாடலில் இருந்து அப்படியே தக்க வைத்து கொண்டுள்ளது. வீல்பேஸ் அளவு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதால், உட்புற கேபினை சற்று பெரியதாக எதிர்பார்க்கலாம்.

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்...

பின்புற பில்லர்கள் சற்று வளைந்த வடிவில் உள்ளதால், இந்த ஸ்கார்பியோ காரானது தனது வழக்கமான பாக்ஸி ஸ்டைலை பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்த வளைந்த பின்புற பில்லர்களினால் உட்புறத்தில் பின்புற இருக்கைகளுக்கு கூடுதலான காலி இடங்களை இந்த கார் பெற்றுள்ளது. பின்புறத்தில், புதிய வடிவில் மாற்றியமைக்கப்பட்டுள்ள டெயில்லேம்ப்ஸ் மற்றும் டெயில்கேட்டை இந்த 2020 ஸ்கார்பியோ மாடல் கொண்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்...

காரின் உட்புறத்தில் ப்ரீமியம் டேஸ்போர்டு மற்றும் கன்சோலுடன் இரு நிறங்களில் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ மாடலின் டாப் வேரியண்ட்கள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய பெரிய அளவிலான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்-அப் திரை, வயர்லெஸ் சார்ஜிங் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், பல செயல்பாடுகளை கொண்ட புதிய ஸ்டேரிங் வீல் போன்ற நவீன தொழிற்நுட்பங்களை கொண்டுள்ளன.

Most Read:பெட்ரோல், டீசலுக்கு நீங்கள் செலவிடும் தொகை இனி குறையும்... மோடி அரசு மாஸ் திட்டம்... என்ன தெரியுமா?

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்...

என்ஜின் அமைப்பாக இந்த கார் அடுத்த ஆண்டில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான நான்கு சிலிண்டர் அமைப்பை கொண்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ளது. இந்த டீசல் என்ஜின் தற்சமயம் 15.4 கிமீ மைலேஜ்ஜை தருகிறது. இந்த மைலேஜ் அளவு, என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட பிறகு வேறுபட அதிக வாய்ப்புள்ளது.

Most Read:எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த காரில் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ள 2020 ஸ்கார்பியோ மாடல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ளது.

Most Read:பாலியல் வீடியோவில் மட்டுமில்லைங்க மற்றொன்றிலும் சென்னை முதலிடம்... என்னனுதான் தெரிஞ்சிப்போமே..!

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்...

சுமார் 17 வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் பிஎஸ்6 அப்டேட்டை தவிர்த்து இதுவரை இரு முறை மட்டுமே அப்டேட்களை பெற்றிருந்தாலும் எஸ்யூவி பிரிவில் மாதந்தோறும் சிறந்த முறையில் விற்பனையை பதிவு செய்யும் கார்களில் ஒன்றாக உள்ளது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ மட்டுமின்றி தனது பிரபல மாடல் கார்களான தார், எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மாடல்களையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்துவருகிறது.

Image Courtesy: Team BHP

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
All-New 2020 Mahindra Scorpio Spotted Again; Launch Likely In Feb
Story first published: Tuesday, December 24, 2019, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X