மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் விற்பனை 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை விட கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் 14,240 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 15,155 கார்கள் விற்பனையான 2018 நவம்பர் மாதத்தை விட 6 சதவீதம் குறைவாகும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

இருப்பினும் கடந்த மாத விற்பனையில் மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் தான் உள்ளது. ஆனால் நான்காவது இடத்தில் உள்ள கியா செல்டோஸ் மஹிந்திராவை விட வெறும் 235 யூனிட்கள் தான் பின்தங்கியுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் 5.4 சதவீத மார்க்கெட் பங்கை கடந்த மாதத்தில் பெற்றுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விற்பனையான கார்களில் ஸ்கார்பியோ மட்டுமே விற்பனையில் வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது கடந்த மாதத்தில் 3,878 யூனிட்கள் விற்பனையான ஸ்கார்பியோ மாடல் 2018 நவம்பரில் 2,906 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதன்மூலம் ஸ்கார்பியோ கார் கடந்த ஆண்டு நவம்பரை விட 33 சதவீதம் விற்பனையில் வளர்ச்சியை கண்டுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

இருப்பினும் 4,628 கார்கள் விற்பனையான 2019 அக்டோபர் மாதத்தை விட இந்த எண்ணிக்கை 16 சதவீதம் குறைவாகும். விற்பனை நிலவரம் ஒருபுறம் இருக்க, ஸ்கார்பியோ மாடலின் அடுத்த தலைமுறை காரை அடுத்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய காரின் சோதனை ஓட்டங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவதை பார்த்திருப்பீர்கள்.

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

அந்த வகையில் இதன் சமீபத்திய சோதனை ஓட்டம் கடந்த நவம்பர் மாத இறுதியில் நடைபெற்றது. அப்போது மிக அருகில் எடுக்கப்பட்ட ஸ்கார்பியோ புதிய தலைமுறை காரின் புகைப்படங்களை காண கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மீண்டும் சோதனை ஓட்டம்... மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

கடந்த 17 வருடங்களாக இரு ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களில் விற்பனையாகி வந்த ஸ்கார்பியோ மாடல் இந்த புதிய அப்டேட் வெர்சனால் பல உட்புற மற்றும் வெளிப்புற டிசைன் மாற்றங்களை பெற்றுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தில் அப்டேட் செய்யப்பட்டு வரும் மாடல்கள் அனைத்திலும் முன்புறம் கவனிக்கத்தக்க வகையில் மாற்றப்படுகின்றன.

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

அதாவது முன்புறத்தில் உள்ள ஹெட்லைட்ஸ், க்ரில் மற்றும் பம்பர் அமைப்புகள் போன்றவை சாலையில் கார் சென்றால் உற்று கவனிக்க வைக்கும் விதத்தில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான அப்டேட்களை ஸ்கார்பியோவின் அடுத்த தலைமுறை காரும் பெற்றிருக்கும்.

Most Read:2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

மேலும் தனது பிரிவில் உள்ள மற்ற மாடல்களுடன் போட்டியிடுவதற்காக உட்புறத்தில் டேஸ்போர்டு, சென்டர் கன்சோல் மற்றும் கேபின் தீம் உள்ளிட்டவற்றிலும் மாற்றங்களை இந்த 2020 ஸ்கார்பியோ மாடல் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

மஹிந்திரா நிறுவனம் தனது பெரும்பாலான 2020 மாடல்களில் ஹெட்-அப் திரை, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய பெரிய அளவிலான எட்டு இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை வழங்கி வருகிறது.

Most Read:சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனையில் முன்னேற்றம்... கடந்த மாதத்தில் 33% வளர்ச்சி...

இந்த புதிய ஸ்கார்பியோ காரின் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அறிமுகமாகத்திற்கு முன்பாகவே இரண்டாம் தலைமுறை தார் ஆப்-ரோட் மாடல் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Scorpio Sales Up By 33%, New-Gen Launching Early Next Year
Story first published: Saturday, December 14, 2019, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X