சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

மஹிந்திரா நிறுவனத்தின் தார் ஜீப், பள்ளத்தில் சிக்கிய பாரத் பென்ஸ் சரக்கு லாரியை அசால்டாக வெளியேற்றுவது போன்ற வீடியோக் காட்சி தற்போது வெளியாகி, வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் வெளியாகும் அனைத்து வீடியோக்களும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைவதில்லை. ஆனால், ஒரு சில வீடியோக்கள் தலைப்பு செய்தியாகவே மாறிவிடுகின்றன.

அந்தவகையில், மஹிந்திரா நிறுவனத்தின் தார், அதைவிட பல மடங்கு பெரிய உருவம் கொண்ட பாரத் பென்ஸ் நிறுவனத்தின் லாரியை சகதியில் இருந்து விடிவிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

அந்த வீடியோதான் தற்போது வாகன உலகின் டிரெண்டிங் தகவலாகவும் மாறியுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றிருப்பது உறுதியாக தெரிகின்றது. ஆனால், அது எந்த மாவட்டத்தில் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

சம்பவம்குறித்த வெளியாகியுள்ள வீடியோவில், கொட்டும் மழையில் கணிசமான நபர்களை ஏற்றிக் கொண்டு நிற்கும் லாரியை, தார் கயிறு கட்டி இழுக்கின்றது. சில நொடிகள் வம்பு காட்டும் அந்த லாரி, எஞ்ஜினின் ஒரு சில உறுமல்களிலேயே அசைந்து விடுகின்றது. தொடர்ந்து, அந்த லாரி சாலையின் ஓரத்தில் இருந்து மேற்பரப்பிற்கு வர தொடங்குகின்றது.

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

மழையின் காரணமாக லாரி இந்த இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கலாம் என தெரிகின்றது. அதேசமயம், எதற்காக சாலையை விட்டு லாரி மண் பரப்பில் நிற்கப்பட்டது என்ற தகவல் முழுமையாக தெரிய வரவில்லை. இருப்பினும், லாரியின் ஓட்டுநர் அதை பார்க்கிங் செய்வதற்காக சாலையை விட்டுவிட்டு மணல் பரப்பில் நிறுத்தியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

தற்போது, பின்பக்க பாடலுடன் வைரலாகி வரும் இந்த வீடியோவை வண்டி பிரந்தன்மர் என்ற முகப்புத்தக பயனர் குழு வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் தார், 4X4 என்ற அளவு கொண்ட ஜீப் ரக வாகனமாகும். தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோ தாரின், டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

அதேசமயம், தாரின் இத்தகைய டார்க் திறனுக்கு அதன் நான்கு வீல்களும் இயங்கு தன்மையே முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. இந்த திறன் அதன் டார்க்கை 2.2 மடங்கு அதிகப்படுத்துகின்றது. ஆகையால், அதிக முறுக்கு விசையின்போது, 550 என்எம் டார்க்கை அது வெளிப்படுத்துகின்றது.

இந்த அதீத திறனின் காரணமாகவே, பாரத் பென்ஸ் லாரியை மிக அசால்டாக அது வெளியேற்றியது.

MOST READ: 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி!

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

பொதுவாக மழைக் காலங்களில் வாகனங்களுக்கு போதுமான கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. அதிலும், மண் சாலைகள் மிகப்பெரிய சவால் நிறைந்ததாகவே மாறிவிடுகின்றன. இதை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த காட்சி அமைந்துள்ளது.

ஆனால், ஆஃப் ரோடு வாகனங்கள் இதுபோன்ற அனைத்து சூழலையும் அசால்ட் செய்து விடுகின்றன.

MOST READ: விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

அதேசமயம், இதுபோன்று சேற்றில் சிக்கிய வாகனங்களை வெளிப்படுத்தும்போது அதிகம் கவனத்துடன் செயல்படவேண்டும். இவை மிகவும் ஆபத்தானவை. அதை விளக்கும் வகையில் இணையத்தில் பல வீடியோக் காட்சிகள் உள்ளன.

அவ்வாறு பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை மீட்கும் என்ன ஆபத்துகள் நேரும் என்பதை கீழே காணலாம்...

MOST READ: வெறும் 999 ரூபாயில் கார்களுக்கான முழு பரிசோதனை திட்டம்... சென்னையில் கோ-பம்பர் நிறுவனம் அறிமுகம்!

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை கயிறு கட்டி இழுக்கும்போது, அந்த கயிறு தூண்டாக நேரலாம். ஆகையால், வாகனத்தின் உருவத்தைப் பொருத்து அதனை தாங்கும் திறன் கொண்ட அடர்த்தியான கயிற்றைப் பயன்படுத்துவது சிறந்தது.

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

இரு வாகனங்களையும் தொடர்புபடுத்தும், அதாவது கயிறு கட்டும் பகுதி நல்ல உறுதியான பகுதியா என்பதை சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கயிறு கட்டப்படும் இடங்கும் விரைவில் சேதமடைந்து, கயிறு தூக்கி வீசப்பட்டு பெரும் ஆபத்து நேரிடலாம். ஆகையால் முன்னெச்சரிக்கையும் செயல்படுவது நல்லது.

சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

பள்ளத்தில் இருந்து அல்லது சகதியில் சிக்கிய வாகனத்தை மீட்கும்போது அந்த வாகனம் பாதுகாப்பான இடத்தில் நிலை நிறுத்தப்படுகின்றதா என்பதையும் முன்னதாகவே ஆய்வு செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால், மீட்கப்பட்ட வாகனம் மீண்டும் தாழ்வான பகுதியில் உருண்டோடிவிடலாம். ஆகையால், வாகனங்களை மீட்கும் தேவையான உபகரணங்களைக் கை வசம் வைத்திருப்பது அவசியமான ஒன்று.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Thar Rescues Stuck Bharatbenz Multiaxle Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X