மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி நேற்றுமுன்தினம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. போட்டியாளர்களைவிட அதிக சிறப்பம்சங்களுடன் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இந்த எஸ்யூவி வந்திருக்கிறது.

பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வந்திருக்கும் இந்த புதிய எஸ்யூவி மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைப்பது வாடிக்கையாளருக்கு சிறிய ஏமாற்றத்தை தந்துள்ளது. சிறிது காலம் கழித்து ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலுக்கு பதிலாக, இப்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் வழங்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதனை உறுதிசெய்யும் விதமாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்!

மும்பையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைவிட ஏஎம்டி கியர்பாக்ஸை பொருத்துவதற்காக சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.

மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு நிகரான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். எனவே, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை மஹிந்திரா கையில் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்!

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல், டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது W4, W6, W8 மற்றும் W8 ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். சோதனை ஓட்டத்தில் இருக்கும் W8 ஏஎம்டி மாடலில் லெதர் இன்டீரியர், இரட்டை வண்ண இன்டீரியர் தீம் ஆகியவற்றை காண முடிகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் மட்டுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்தாலியை சேர்ந்த மேக்னட்டி மரெல்லி நிறுவனத்திடமிருந்து இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் சப்ளை பெறப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடலானது ரூ.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி, டாடா நெக்ஸான் ஏஎம்டி ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

Image Courtesy: Ashwin Rajwade/Twitter

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 was launched in the Indian market recently. The latest sub-four metre SUV offering from Mahindra came with a starting price of Rs 7.90 lakh, ex-showroom (India). However, Mahindra introduced the XUV300 with just a manual transmission for both its engine options. Although, they did confirm that an AMT is in the works.
Story first published: Saturday, February 16, 2019, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X