சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் பிஎஸ்-6 மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ளன. எனவே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில், அனைத்து வாகன நிறுவனங்களும் தங்களின் மாடல்களை வேகமாக மேம்படுத்தி வருகின்றன. இதற்கு இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.

சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியிருந்த எக்ஸ்யூவி300 காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை இரண்டும் பிஎஸ்-4 இன்ஜின்கள் ஆகும்.

சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. இந்த இரண்டு இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மஹிந்திரா நிறுவனம் வழங்கி வருகிறது.

சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

இந்த இரண்டு இன்ஜின்களையும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி300 காரை மஹிந்திரா நிறுவனம் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. இதன்படி சாலை சோதனையில் இருந்த பிஎஸ்-6 எக்ஸ்யூவி300 காரின் ஸ்பை படம் தற்போது வெளியாகியுள்ளது.

சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

இதன் ப்யூயல் ஃபில்லர் கேப் மீது பிஎஸ்-6 ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதன்மூலம் இதில் பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் பிஎஸ்-6 பெட்ரோல் இன்ஜினா? அல்லது பிஎஸ்-6 டீசல் இன்ஜினா? என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோல் தோற்றத்தில் பிஎஸ்-4 மாடலை போன்றே பிஎஸ்-6 மாடலும் உள்ளது.

சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

எனவே புதிதாக வரவுள்ள பிஎஸ்-6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்த காரில் வழங்கப்படும் வசதிகளிலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

இந்த செக்மெண்ட்டில் அதிக வசதிகள் நிறைந்த கார்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 திகழ்கிறது. 7 ஏர் பேக்குகள், ரியர் டிஸ்க் பிரேக், ட்யூயல் ஜோன் ஏசி மற்றும் பல்வேறு ஸ்டியரிங் மோடுகள் என மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் ஏராளமான வசதிகள் நிறைந்துள்ளன. ஆனால் தற்போது உள்ள மாடலை காட்டிலும், பிஎஸ்-6 மாடலின் விலை அதிகமாக இருக்கும்.

சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

பிஎஸ்-6 பெட்ரோல் எக்ஸ்யூவி300 காரின் விலை ரூ.20 ஆயிரம் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் பிஎஸ்-6 டீசல் எக்ஸ்யூவி300 மாடலின் விலை சுமார் 1 லட்சம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 எக்ஸ்யூவி300 கார்கள் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?

இதுதவிர எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. வரும் 2020ம் ஆண்டின் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Vikatan

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 BS6 Spied Before Launch. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X