ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... மலிவான விலையில் உலகை அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் வகையிலான எலெக்ட்ரிக் காரை, இந்திய நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. குறைவான விலையில் விற்பனைக்கு வரும் இந்த கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... மலிவான விலையில் உலகை அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கார் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300). எஸ்யூவி (SUV) வகையை சேர்ந்த இந்த கார், கடந்த 14ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் ஆரம்ப விலை வெறும் 7.90 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் இது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... மலிவான விலையில் உலகை அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்

இந்த சூழலில், எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு களமிறக்கும் பணிகளில், மஹிந்திரா நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார், இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்படுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 14ம் தேதி நடைபெற்ற எக்ஸ்யூவி300 காரின் அறிமுக விழாவில், மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா கலந்து கொண்டார். அவரது பேட்டியின் வாயிலாகதான் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் குறித்த பல்வேறு புதிய தகவல்களையும் பவன் கோயங்கா வெளியிட்டார். தற்போது இந்த கார் எஸ்210 (S210) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

ஸ்டாண்டர்டு ரேஞ்ச் (Standard Range) மற்றும் லாங் ரேஞ்ச் (Long Range) என்ற 2 வெர்ஷன்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதே 'ரேஞ்ச்' என குறிப்பிடப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... மலிவான விலையில் உலகை அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்

தற்போதைய சூழலில் இந்தியாவில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் சொல்லிக்கொள்ளும்படியாக பிரபலம் அடையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

ஆனால் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அந்த குறையை தகர்த்து எறியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் லாங் ரேஞ்ச் வெர்ஷனில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 350-400 கிலோ மீட்டர்கள் வரை மிக எளிதாக பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில்தான் இவ்வளவு அதிகமான ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவிலும் இத்தகைய தரம் வாய்ந்த கார்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான்.

அதே நேரத்தில் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 200 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் பேட்டரிக்காக மஹிந்திரா மற்றும் எல்ஜி செம் (LG Chem) ஆகிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... மலிவான விலையில் உலகை அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்

இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்படவுள்ள மிகவும் அதிசக்தி வாய்ந்த, எதிர்காலத்திற்கும் உகந்த லித்தியன் இயான் பேட்டரிகள்தான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்திய கால நிலைகள் மற்றும் சாலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த பேட்டரி இருக்கும். நிக்கல் - மாங்கனீசு - கோபால்ட் அடிப்படையிலான லித்தியம் இயான் பேட்டரிகளையும் இந்த கூட்டணி உருவாக்கவுள்ளது. இந்த பேட்டரிகள், ஆற்றல் அடர்த்தி (Energy Density) என்ற விஷயத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவை.

இந்த பேட்டரியானது, அளவில் கச்சிதமாக இருக்கும். அதே நேரத்தில் அதிக அளவிலான சக்தியை சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் அதிகரிக்கும். இவ்வாறான பேட்டரிகள்தான் தற்போதைய தேவை.

எக்ஸ்யூவி300 காரின் வழக்கமான வெர்ஷனை காட்டிலும், எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலை சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில் இதன் பேட்டரிகள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் இவைதான் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... மலிவான விலையில் உலகை அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்

இருந்தபோதும் எலெக்ட்ரிக் கார்களுக்கு உரிய நியாயமான விலைதான் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அனேகமாக எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா (Hyundai Kona) என்ற எலெக்ட்ரிக் காரும் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 300ஐ போல் இதுவும் எஸ்யூவி வகையை சேர்ந்த கார்தான்.

இதன் ஆரம்ப விலை 25 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விலை நிச்சயம் குறைவாகதான் இருக்கும் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் வருங்காலங்களில் பேட்டரிகளின் விலை குறையலாம் என்பதும் ஆட்டோமொபைல் துறை நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. அப்போது எலெக்ட்ரிக் கார்களின் விலை மேலும் குறையலாம். ஆனால் இதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... மலிவான விலையில் உலகை அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்

இந்த சூழலில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி வரும் ஆகஸ்ட் மாதம் லான்ச் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி300 தவிர மேலும் பல எலெக்ட்ரிக் கார்களையும் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், குறிப்பிடத்தகுந்த கார் கேயூவி 100 எலெக்ட்ரிக் (KUV 100).

கேயூவி 100 எலெக்ட்ரிக் காரை, 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. நடப்பாண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மஹிந்திரா கேயூவி 100 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 Electric (S210) Promises A Range Of 400km — Details Out. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X