ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ரகசியமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி.

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) கார், கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எக்ஸ்யூவி300 காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதன்மூலம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே மார்க்கெட்டில் 'ஹிட்' அடித்துள்ளது எக்ஸ்யூவி300. தற்போது இந்தியாவின் சப் 4 மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் மூன்றாவது கார் இதுதான். முதல் இரண்டு இடங்களில், மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza) மற்றும் டாடா நெக்ஸான் (TATA Nexon) ஆகிய மாடல்கள் உள்ளன.

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

முன்னதாக எக்ஸ்யூவி300 காரின் அறிமுக விழாவின்போது, இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கண்டிப்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் உறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வரும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில், எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யப்பட்டு வரும் ஸ்பை படங்கள் தற்போது முதல் முறையாக வெளியாகியுள்ளன. மோட்டார் ஆக்டேன் தளம் அந்த படங்களை வெளியிட்டுள்ளது.

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதனை வைத்து பார்க்கையில், எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் கட்டமைப்பில் எவ்வித மாற்றங்களையும் மஹிந்திரா நிறுவனம் செய்யாது என தெளிவாக தெரிகிறது. அதாவது எக்ஸ்யூவி300 காரின் உருவத்தை போலவே அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் தோற்றமும் இருக்கும். ஆனால் புதிய க்ரில் அமைப்பு, புதிய சக்கரங்கள், கூடுதலான பேட்ஜ்கள் ஆகியவற்றை இது நிச்சயமாக பெறும்.

MOST READ: தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

புதிய கலர் ஸ்கிம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் கூட உள்ளன. சாலை சோதனை செய்யப்பட்டு வரும் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரில், பேஸிக் ஹெட்லேம்ப் செட் அப் மற்றும் ஸ்டீல் சக்கரங்கள்தான் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் விற்பனைக்கு வரும்போது அதிநவீனமான முறையில் இவை மாற்றப்படும். எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டின் (2020) இரண்டாவது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இ-வெரிட்டோ (Mahindra e-Verito) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. என்றாலும் எலெக்ட்ரிக் பவர் டிரெய்னை தாங்கி வரும் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் சப் 4 மீட்டர் எஸ்யூவியாக எக்ஸ்யூவி300 இருக்கப்போகிறது.

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஸ்டாண்டர்டு ரேஞ்ச் (Standard Range) மற்றும் லாங் ரேஞ்ச் (Long Range) என்ற 2 மாடல்களில் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இதன் ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மாடலில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர்கள் வரையும், லாங் ரேஞ்ச் மாடலில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 350-400 கிலோ மீட்டர்கள் வரையும் பயணிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதில், ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மாடலின் விலை குறைவாக இருக்கும். ஆனால் இதில் சற்று சக்தி குறைவான மோட்டார்தான் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் இதில் குறைவான டிரைவிங் ரேஞ்ச் கொண்ட பேட்டரிதான் வழங்கப்படும். அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

அதற்கேற்ப இது அதிக சக்தியை வெளிப்படுத்துவதுடன், கூடுதல் டிரைவிங் ரேஞ்ச் கொண்டதாகவும் இருக்கும். கூடுதல் டிரைவிங் ரேஞ்ச் இருப்பதால், பேட்டரியை சார்ஜ் செய்வதை பற்றி கவலைப்படாமல், நீண்ட நேரம் பயணிக்க முடியும். இவை தவிர மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

MOST READ: பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

ரகசியமாக சோதனை செய்யப்படும் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

என்றாலும் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலை 11.50 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓரளவுக்கு குறைவான விலை என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது. வரும் காலங்களில் எக்ஸ்யூவி300 தவிர இன்னும் ஏராளமான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், ஹூண்டாய் கோனா (Hyundai Kona), எம்ஜி இஇஸட்எஸ் (MG eZS) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 Electric SUV Spy Pics, Launch Details, Expected Price. Read in Tamil
Story first published: Monday, April 1, 2019, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X