மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் வீடியோ ரிவியூ!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியை அண்மையில் கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். வரும் 14ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்த எஸ்யூவியை வாங்க இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதத்தில், இதன் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து நேரடியாக பார்க்கலாம்.

சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையில்தான் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தியாவிற்கு தக்கவாறு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திராவின் வெற்றிகரமான எக்ஸ்யூவி500 எஸ்யூவியை பிரதிபலிக்கும் விதத்தில் சில டிசைன் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று அராய் சான்றளித்துள்ளது. இந்த எஸ்யூவியில் 42 லிட்டர் கொள்திறன் உடைய எரிபொருள் கலன் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 714 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்கிறது மஹிந்திரா.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டுள்ளது. இந்த எஸ்யூவி 3,995 மிமீ நீளமும், 1,821 மிமீ அகலமும், 1,617 மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவி 2,600 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டது. போதுமான ஹெட்ரூம், லெக்ரூம் இடவசதியை அளிக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் வீடியோ ரிவியூ!

புதிய மஹிந்திரா எஸ்யூவியில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்தை மஹிந்திரா புளூ சென்ஸ் அப்ளிகேஷன் மூலமாக ஸ்மார்ட் வாட்ச்சுடன் இணைத்துக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக வர இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
The Mahindra XUV300 is set to launch in India on February 14th. We got behind the wheel of the all-new Mahindra XUV300 in Goa and took it for a drive. Click the video below to watch DriveSpark's video review of the all-new XUV300 from Mahindra and get all the details about the SUV including specs, performance, design and features.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X