மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் W11 வேரியண்ட்டில் ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் அப்டேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த ரகத்தில் பெரும்பாலான எஸ்யூவிகள் 5 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது 7 சீட்டர் மாடலாக கிடைப்பது கூடுதல் மதிப்பை தருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

மேலும், அதிக தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய மாடலாகவும் இருக்கிறது. ஆனால், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும் வசதியை பெற்றிருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் W11 என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் தற்போது ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

இதனால், ஆப்பிள் சாதனம் பயன்படுத்துவோருக்கு இனி சிறந்த தேர்வாகவும், கூடுதல் மதிப்பாகவும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாறி இருக்கிறது. மேலும், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பல்வேறு தகவல்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற முடியும். அவசர காலத்தில் உதவி மையங்களை தொடர்பு கொள்வதற்கான வசதியும் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆப்பிள் கார் ப்ளே செயலி மூலமாக அழைப்புகளை எளிதாக எடுத்து பேசுவதற்கான வாய்ப்பு, ஆப்பிள் சாதனங்களின் செயலியிலிருந்து பாடல்களை கேட்பதற்கான வாய்ப்புகளையும் பெற முடியும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

புதிதாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் W11 வேரியண்ட்டை வாங்குவோர் தவிர்த்து, ஏற்கனவே இந்த வேரியண்ட்டை வாங்கியோரும், தங்களது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே செயலிக்கான சப்போர்ட் செய்யும் அப்டேட் செய்து கொள்ளலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த காரில் இருக்கும் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

இந்த எஸ்யூவியின் 2.2 லிட்டர் பெட்ரோல் மாடலானது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் ஒரே வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது W3, W5, W7, W9, W11, W11(O) ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், W11 வேரியண்ட்டிற்கு இந்த ஆப்பிள் கார் ப்ளே அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் மற்றும் விரைவில் வரும் கியா செல்டோஸ் போன்ற எஸ்யூவி மாடல்களால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்தே, அவசரமாக இந்த அப்டேட்டை வழங்கி இருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has updated the infotainment system in the XUV500 to support Apple CarPlay. The Apple CarPlay feature has been added to the top-spec XUV500 W11 model. Through this feature, users can connect their Apple iPhones to the infotainment system of the XUV500 to get access to several of the phone's features via the car's infotainment system.
Story first published: Friday, July 12, 2019, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X