இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று எம்ஜி ஹெக்டர் (MG Hector). இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள தயாரிப்புதான் ஹெக்டர்.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

இது எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிடும்.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அத்துடன் தனது டீலர்ஷிப்கள் மற்றும் வெப்சைட் மூலமாக ஹெக்டர் காருக்கான முன்பதிவுகளையும் எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏற்க தொடங்கி விட்டது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

எம்ஜி ஹெக்டர் காரை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். ஆனால் எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரின் விலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

அனேகமாக இம்மாத இறுதியில் விலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் டெஸ்ட் டிரைவ் தொடங்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

143 எச்பி பவரை உருவாக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 170 எச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஹெக்டர் காரில் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

ஸ்டாண்டர்டு பெட்ரோல் வெர்ஷனை காட்டிலும் இது 12 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தில் சிறந்து விளங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்களில், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

அதே சமயம் எம்ஜி ஹெக்டர் காரின் டீசல் இன்ஜின் வேரியண்ட்களில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படவுள்ளது. அத்துடன் இந்த செக்மெண்ட்டிலேயே பல்வேறு முதன்மையான வசதிகளுடன் எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹெக்டர் கார் குறித்த புதிய தகவல் இதுதான்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்

இதில், பல்வேறு கனெக்டிவிட்டி டெக்னாலஜிக்களுடன் கூடிய 10.4 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன் ரூஃப் மற்றும் 6 ஏர் பேக்குகள் ஆகியவை குறிப்பிடத்தகுந்த வசதிகள் ஆகும். ரூ.15-20 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் எம்ஜி ஹெக்டர் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra XUV500, Tata Harrier Rival MG Hector SUV Test Drives Begin From June 15. Read in Tamil
Story first published: Monday, June 10, 2019, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X