பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் புதிய கார்கள் விற்பனை செய்யப்படுவது கட்டாயமாகிறது. இதற்காக, அனைத்து வாகன நிறுவனங்களும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எஞ்சினை மேம்படுத்தி அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தநிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி பிஎஸ்-6 எஞ்சினுடன் கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஆல்ட்டோ, வேகன் ஆர், பலேனோ மற்றும் டிசையர் கார்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், பிஎஸ்-6 தரமுடைய பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வேரியண்ட்டுக்கு தக்கவாறு, ரூ.7.54 லட்சம் முதல் ரூ.10.05 லட்சம் வரையிலான விலையில் மாருதி எர்டிகா காரின் பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் கிடைக்கும்.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் பிஎஸ்-6 பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் கே-15 சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மாருதி எர்டிகா கார் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டுவிதமான டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால், இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மட்டுமே இந்த இரண்டு டீசல் எஞ்சின் தேர்வுகளும் விற்பனை செய்யப்படும் வாய்ப்புள்ளது. அதன்பிறகு, பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, மாருதி எர்டிகா காரில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. ஏற்கனவே வழங்கப்பட்டும் வரும் வேரியண்ட்டுகளில் அதே சிறப்பம்சங்களுடன் கிடைக்கும்.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

அண்மையில்ல மாருதி எர்டிகா காரின் சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் ரூ.8.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது நினைவிருக்கலாம்.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

எம்பிவி கார் ரகத்தில் இந்தியாவின் சிறந்த தேர்வாக மாருதி எர்டிகா கார் இருந்து வருகிறது. விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. விரைவில் மாருதி எர்டிகா காரின் எக்ஸ்எல்-6 என்ற பெயரிலான 6 சீட்டர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலானது மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு வர இருக்கிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has launched the BS-VI compliant Ertiga MPV in the Indian market. The Maruti Ertiga BS-VI model is offered with a starting price of Rs 7.54 lakh and goes up all the way to Rs 10.05 lakh for the top-end variant. All prices are ex-showroom (Delhi). Maruti Suzuki has stated that "Ertiga (Petrol) is now BS-VI compliant. This will result in a price increase in all variants of the model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X