மாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது?

கேப்டன் இருக்கைகளுடன் சொகுசான மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் முதல்முறையாக தரிசனம் தந்துள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள், அறிமுக விபரங்களை காணலாம்.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது?

கடந்த ஆண்டு இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களில் சிறப்பாக மேம்படுத்தப்பட்ட இந்த மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், மாருதி எர்டிகா காரின் சொகுசான மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் கேப்டன் இருக்கைகளுடன் 6 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது?

அதில், மாருதி எர்டிகா காரில் கூடுதல் கவர்ச்சிக்காக பல ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெரிய க்ரில் அமைப்பு, க்ரோம் பாகங்கள், பெரிய ஏர் இன்டேக் அமைப்புடன் மிரட்டலான பம்பர் அமைப்புடன் வர இருக்கிறது.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது?

காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்களும் பொருத்தப்பட்டுள்ளதுடன், சாதாரண எர்டிகாவைவிட ஸ்போர்ட் மாடல் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்களும் இடம்பெற்றுள்ளன.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது?

இன்டீரியரிலும் ஏராளமான கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டிருக்கும். முக்கிய மாற்றமாக இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் 6 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. இன்னபிற அம்சங்கள் குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் இல்்லை.

MOST READ: எம்ஜி ஹெக்டர் காருக்கு விளம்பரம் செய்யப்போய் கோவை சிட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பத்திரிக்கையாளர்!

மாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது?

புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

MOST READ: இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்

மாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது?

புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் கார் மாடலானது அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும். ஆனால், இந்த எர்டிகா மாடலானது மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் தீபாவளிக்கு முன்னதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Motorbeam

Most Read Articles

English summary
New Maruti Ertiga Sport model spied in India for the first time ahead of Diwali launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X