விற்பனையில் கலக்கும் மாருதி செலிரியோ கார்!

விற்பனையில் மாருதி செலிரியோ கார் கலக்கி வருகிறது. போட்டியாளர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கும் அதன் விபரங்களை காணலாம்.

விற்பனையில் கலக்கும் மாருதி செலிரியோ கார்!

கடந்த 2014ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்த இந்தியாவின் முதல் கார் மாடல் என்பதால், துவக்கம் முதலே விற்பனையில் சிறப்பாக இருந்து வருகிறது.

விற்பனையில் கலக்கும் மாருதி செலிரியோ கார்!

மேலும், பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி செலிரியோ கார் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. குறிப்பாக, மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது. கச்சிதமான டிசைன், போதுமான வசதிகள் மற்றும் மிகச் சரியான பட்ஜெட் போன்ற காரணங்கள் மாருதி செலிரியோ கார் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

விற்பனையில் கலக்கும் மாருதி செலிரியோ கார்!

இந்த நிலையில், கடந்த 2018-19 நிதி ஆண்டு காலக்கட்டத்தில் மாருதி செலிரியோ காரின் விற்பனை முக்கிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதாவது, கடந்த நிதி ஆண்டில் மட்டும் 1,03,734 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகி உள்ளன. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டு காலத்தைவிட 10 சதவீதம் கூடுதலாகும். மேலும், இதுவரை 4.7 லட்சம் செலிரியோ கார்கள் 5 ஆண்டு காலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விற்பனையில் கலக்கும் மாருதி செலிரியோ கார்!

மாருதி செலிரியோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டை 31 சதவீத வாடிக்கையாளர்களும், இசட்எக்ஸ்ஐ டாப் வேரியண்ட்டை 52 சதவீத வாடிக்கையாளர்களும், சிஎன்ஜி வேரியண்ட்டை 20 சதவீத வாடிக்கையாளர்களும் தேர்வு செய்வதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

விற்பனையில் கலக்கும் மாருதி செலிரியோ கார்!

மாருதி செலிரியோ காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்ப்டடு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜி மாடலானது 58 பிஎச்பி பவரையும், 78 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

விற்பனையில் கலக்கும் மாருதி செலிரியோ கார்!

மாருதி செலிரியோ காரின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்கள் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 31.79 கிமீ மைலேஜ் செல்லும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. நடைமுறையிலும் சிறப்பான மைலேஜை வழங்கும் மாடலாக பெயர் பெற்றிருக்கிறது..

விற்பனையில் கலக்கும் மாருதி செலிரியோ கார்!

புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஒப்பான பாதுகாப்பு விஷயங்களும் மாருதி செலிரியோ காரில் இடம்பெற்றுவிட்டன. ஓட்டுனருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர்கள் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

விற்பனையில் கலக்கும் மாருதி செலிரியோ கார்!

கடந்த 2014ம் ஆண்டு ரூ.3.90 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி செலிரியோ கார் தற்போது ரூ.4.40 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டாடா டியாகோ, ஹூண்டாய் சான்ட்ரோ ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Celerio records highest ever yearly sales.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X