இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புதிய 6 இருக்கைக் கொண்ட காருக்கான புக்கிங்கை தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புகழ்பெற்ற எர்டிகா மடாலிலான ஆறு இருக்கைக் கொண்ட பிரிமியம் ரக எம்பிவி காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த காருக்கு எக்ஸ்எல்6 என்ற பெயரை அந்நிறுவனம் வைத்துள்ளது. இதற்கு இந்தியாவில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில், அதற்கான புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

அதேசமயம், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் வருகின்ற 21ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதைமுன்னிட்டே தற்போது ரூ. 11 ஆயிரம் என்ற முன் தொகையில் புக்கிங் செய்யப்பட்டு வருகின்றது. இந்த எம்பிவி ரக காரை ஆன்லைன் அல்லது மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்கள் வழியாக புக் செய்துகொள்ளலாம்.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

மேலும், இந்த கார் நெக்ஸா ஷோரூம்கள் வழியாகவே விற்பனைக்கு வரவிருப்பதாக கூறப்படுகின்றது. அதேசமயம், மாருதி சுஸுகியின் ஷோரூம்களிலும் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி சுஸுகி நிறுவனம், எர்டிகா மாடலைத் தழுவி புதிய எக்ஸ்எல்6 எம்பிவி ரக காரை தயார் செய்திருந்தாலும், இதன் தோற்றும் மற்றும் அம்சங்கள் எர்டிகாவைக் காட்டிலும் மாறுப்பட்டதாகக் காணப்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

அந்தவகையில், எக்ஸ்எல்6 காரின் முகப்பு பகுதியில் புத்தம் புதிய ஸ்டைலிலான கிரில், புரொஜக்டர் மின்விளக்குடன் கூடிய ஹெட்லேம்ப் க்ளஸ்டர் மற்றும் இன்டெக்ரோட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், புதுப்பிக்கப்பட்ட பம்பர் அமைப்பில் பனி விளக்கு பொருத்தப்பட்டிருப்பது சிறப்பாக காட்சியளிக்கின்றது.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

இதேபோன்று, இந்த காரின் பக்கவாட்டு மற்றும் பின்பகுதியிலும் அழகுபடுத்தும் விதமாக சில மேம்படுத்தல் பணி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், பாடி கிளாடிங், பிளாக்கட் அவுட் பாகங்கள், விங் மிர்ரர்கள் மற்றும் புதிய தோற்றத்திலான அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் பின்பகுதியில் கொடுக்கப்பட்ட அப்டேட்டாக, ஸ்கிட் பிளேட்டுடன் கூடிய பம்பர் மற்றும் சற்று உயர்த்தப்பட்ட ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

இந்த நிலையில், பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்று உருவாகிவரும் இந்த புத்தம் புதிய எக்ஸ்எல் 6 கார் குறித்த டீசர் படங்கள் மாருதி சுஸுகி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.

அந்த புகைப்படத்தில், காரின் முகப்பு பகுதி கிரில், கேபின், இருக்கை, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது, காரின் இன்டீரியர் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், 2+2+2 என்ற வரிசையில் காரின் இருக்கை இருப்பதும் உறுதியாகியுள்ளது. இதில், நடுவரிசையில் உள்ள இருக்கைகள், கேப்டன் சீட்டைப் போன்று ஸ்பிளிட் செய்யப்பட்டுள்ளது.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

அதேபோன்று, இன்டீரியரில் கருப்பு மயமாக காட்சியளிப்பதையும் நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், அதன் டேஷ்போர்டு, சென்டர் கன்சோல் மற்றும் லெதர் அப்ஹோல்டரி உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் இருக்கின்றது.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம், ஹார்டெக்ட் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கியுள்ளது. இதே பிளாட்பாரத்தைத்தான் எர்டிகா காருக்கும் பயன்படுத்தப்பட்டது.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

ஆகையால், இந்த கார் பிரிமியம் தரத்தில் உருவாகியிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. மேலும், எக்ஸ்எல்6 காரின் நீளம் 50மிமீட்டரும், அகலம் 40மிமீட்டராகவும் இருக்கின்றது. அதேபோன்று, உயரம் 10 மிமீ இருக்கின்றது. எனவே இந்த காரில் இட வசதியில் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

மாருதி சுஸுகி நிறுவனம், 1.3 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்பாட்டை விரைவில் முடக்க இருக்கின்று. ஆகையால், புதிய எக்ஸ்எல்6 காரில் இந்த எஞ்ஜின் இடம்பெறாத என கூறப்படுகின்றது. ஆகையால், சிறிய ஹைபிரிட் தரத்திலான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதோ நீங்கள் எதிர்பார்த்த சம்பவம் தொடங்கிவிட்டது... மாருதி சுஸுகியின் தகவலால் ரசிகர்கள் பூரிப்பு!

இந்த எஞ்ஜின்தான், தற்போதைய எர்டிகா மற்றும் சியாஸ் போன்ற கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது அதிகபட்சமாக 105 எச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்டவையும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த காரின் விலை போன்ற மற்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Maruti Suzuki XL6 Bookings Open Ahead Of Launch On 21st Of August. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X