மெக்லாரன் ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் மீண்டும் மெர்சிடிஸ் எஞ்சின்!

மெக்லாரன் ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் மீண்டும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஞ்சின்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெக்லாரன் ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் மீண்டும் மெர்சிடிஸ் எஞ்சின்!

கடந்த 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மெக்லாரன் ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் எஞ்சின்கள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு திடீரென தனது ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் ஹோண்டா எஞ்சினை பயன்படுத்த துவங்கியது. அதுவும் நிலைக்காமல், தற்போது ரெனோ கார் நிறுவனத்தின் எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றன.

மெக்லாரன் ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் மீண்டும் மெர்சிடிஸ் எஞ்சின்!

இந்த நிலையில், வரும் 2021ம் ஆண்டு முதல் மீண்டும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஞ்சின்களை தனது ஃபார்முலா-1 கார்களில் பயன்படுத்த மெக்லாரன் முடிவு செய்துள்ளது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இல்லாததால் இந்த முடிவை மெக்லாரன் எடுத்துள்ளது.

மெக்லாரன் ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் மீண்டும் மெர்சிடிஸ் எஞ்சின்!

மெர்சிடிஸ் எஞ்சின் பயன்படுத்தப்பட்ட போது சாம்பியன் பட்டங்களை மெக்லாரன் ஃபார்முலா-1 அணி பெற்றது. இந்த நிலையில், மீண்டும் ஃபார்முலா ரேஸ் உலகில் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

மெக்லாரன் ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் மீண்டும் மெர்சிடிஸ் எஞ்சின்!

தற்போது மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஞ்சின்களை மெர்சிடிஸ் வொர்க்ஸ் டீம், ரேஸிங் பாயிண்ட் மற்றும் வில்லியம்ஸ் எஃப்-1 ஆகிய அணிகள் பயன்படுத்தி வருகின்றன. தற்போது இந்த வரிசையில் மெக்லாரன் அணியும் இணைய இருக்கிறது.

மெக்லாரன் ஃபார்முலா-1 ரேஸ் கார்களில் மீண்டும் மெர்சிடிஸ் எஞ்சின்!

வரும் 2024ம் ஆண்டு வரை மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஞ்சின்களை பயன்படுத்துவதற்கு மெக்லாரன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு வரை ரெனோ எஞ்சினை மெக்லாரன் ரேஸிங் அணி பயன்படுத்த இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #மெக்லாரன் #mclaren
English summary
McLaren has decided to use Mercedes-AMG engines in their race cars from 2021 till at least the end of 2024.
Story first published: Monday, September 30, 2019, 18:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X