ரூ.75 லட்சம் என்ற விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமானது மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே...

மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே, ரூ.75 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.75 லட்சம் என்ற விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமானது மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே...

மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே காரின் 2019 ஃபேஸ்லிஃப்ட் எடிசன், கடந்த ஆண்டு முதல் சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கார் இந்தியாவிற்கும் வந்துள்ளது. நேற்று (மார்ச் 14) நடைபெற்ற விழாவில், இந்திய மார்க்கெட்டில் இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ரூ.75 லட்சம் என்ற விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமானது மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே...

75 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்ஃலிப்டட் சி க்ளாஸ் காரின் கூபே வேரியண்ட்தான் இது. மிகவும் கவர்ச்சிகரமான வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த காரின் எக்ஸ்டீரியர்கள் ஸ்போர்ட்டி லுக்கில் உள்ளன.

ரூ.75 லட்சம் என்ற விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமானது மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே...

இது பிரத்யேகமாக ஏஎம்ஜி 43 4மேட்டிக் (4 வீல் டிரைவ்) வேரியண்டாக விற்பனை செய்யப்படவுள்ளது. மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி 4மேட்டிக் கூபே, ஏஎம்ஜி பாடி ஸ்டைலை பெற்றுள்ளது. இதில், பிரத்யேகமான ஏஎம்ஜி ரேடியேட்டர் க்ரில், ஸ்டைலான ஏர் டேம், மல்டி ஸ்போக் டிசைனுடன் கூடிய ஸ்போர்ட்டி 19 இன்ச் ஏஎம்ஜி அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

MOST READ: இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழகம்... சத்தமே இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி சாதித்தது இதுதான்...

ரூ.75 லட்சம் என்ற விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமானது மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே...

இதன் இன்டீரியரில் ஈர்க்ககூடிய வகையிலான கருப்பு வண்ண தீம் வழங்கப்பட்டுள்ளது. 12.3 இன்ச் முழு டிஜிட்டல் மல்டி பங்ஷன் டிஸ்ப்ளே, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் முன் இருக்கைகள், நப்பா லெதருடன் கூடிய ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் ஸ்டியரிங் வீல் ஆகியவை இதன் குறிப்பிடத்தகுந்த முக்கிய அம்சங்கள்.

ரூ.75 லட்சம் என்ற விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமானது மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே...

இதில், 3.0 லிட்டர், வி6 பிடர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 390 பிஎஸ் பவரையும், 2,500-5000 ஆர்பிஎம்மில் 520 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் இதற்கு உண்டு.

ரூ.75 லட்சம் என்ற விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமானது மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே...

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள். ஏஎம்ஜி 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், இன்டீஜ்வல், கம்ஃபோர்ட், ஸ்லிப்பரி, ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய 5 டிரைவிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: தேர்தல் நெருங்குவதால் அவசரம்... உங்கள் ரகசிய தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் மோடி அரசு...

ரூ.75 லட்சம் என்ற விலையில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமானது மெர்சிடிஸ் சி 43 ஏஎம்ஜி கூபே...

உதாரணத்திற்கு ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் மோட்கள் வேகமான ஆக்ஸலரேஷனுக்கு பொருத்தமாக இருக்கும். பனி போன்ற வழுக்கும் பரப்புகளில் ஸ்லிப்பரி மோடை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இந்தியாவில் நம்பர்-1 லக்ஸரி கார் பிராண்டாக இருந்து வரும் மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள இந்த கார், லக்ஸரி கார் பிரியர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.

Most Read Articles

English summary
Mercedes-AMG C43 Coupe Launched In India At Rs 75 Lakh
Story first published: Friday, March 15, 2019, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X